சினிமா

பிரபல இயக்குனரும், நடிகருமான வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்

Published On 2016-08-06 09:51 IST   |   Update On 2016-08-06 09:51:00 IST
இயக்குனரும், நடிகருமான வியட்நாம் வீடு சுந்தரம் இன்று சென்னையில் காலமானார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
நடிகரும், இயக்குனருமான வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. நாடக நடிகரும், கதை எழுத்தாளருமான சுந்தரம், கடந்த 1970-ம் ஆண்டு 'வியட்நாம் வீடு' என்ற படத்தில், நடிகராக அறிமுகம் ஆனார். இதன்மூலமாக, வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, சிவாஜி கணேசன் நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற 'கவுரவம்' என்ற படத்தை இயக்கினார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, மற்றும் முத்துராமன், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வியட்நாம் வீடு சுந்தரம்,  இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பட கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News