சினிமா

மணிரத்னம் படத்திற்காக உடல் எடையை குறைக்கும் கார்த்தி

Published On 2016-06-19 13:02 IST   |   Update On 2016-06-19 13:02:00 IST
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைக்கவிருக்கிறாராம் கார்த்தி.
நடிகர் கார்த்தி அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி அதிதி ராவ் நடிக்கவுள்ளார். இவர் இந்தியில் வெளிவந்த ‘வாசிர்’ படத்தின் நாயகி ஆவார். இப்படத்தில் கார்த்தி பைலட்டாக நடிக்கவிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில், பைலட் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கார்த்தி தனது உடல் எடையை குறைத்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று தனது உடல் எடையை குறைத்து வருகிறாராம் கார்த்தி. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவி வர்மா ஒளிப்பதிவை கவனிக்கிறார். இசையோடு, காதல் கலந்த கலவையாக உருவாகும் இப்படத்திற்கான பாடல் பதிவு செய்யும் வேலை ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News