சினிமா

இளையராஜாவின் அண்ணன் பாஸ்கருக்கு திருமணம் பம்பாயில் நடந்தது

Published On 2017-05-22 17:25 GMT   |   Update On 2017-05-22 17:26 GMT
இளையராஜாவின் அண்ணன், பாஸ்கரின் திருமணம் பம்பாயில் (தற்போதைய மும்பை) எளிய முறையில் நடந்தது.
இளையராஜாவின் அண்ணன், பாஸ்கரின் திருமணம் பம்பாயில் (தற்போதைய மும்பை) எளிய முறையில் நடந்தது.

இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

"தம்பி அமர் (கங்கை அமரன்) கலாவை காதலிக்கும் விஷயம், அம்மாவுக்கு தெரிந்து விட்டது. கடைசி பிள்ளை என்ற முறையில், அமர் மீது அம்மாவுக்கு ரொம்பப் பிரியம்.

ஆனால், மூத்தவர்களான பாஸ்கரும், நானும் இருக்கும்போது, எங்களுக்கு முன் அமர் திருமணத்தை எப்படி நடத்துவது என்று அம்மா

யோசித்தார்.என் அக்கா பத்மாவுக்கு பம்பாயில் திருமணமாகியிருந்தது. மாப்பிள்ளை ராஜன், கம்ïனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். பாஸ்கருக்கு பெண் பார்க்கச் சொல்லி, அவருக்கு அம்மா கடிதம் எழுதியிருந்தார் போலிருக்கிறது. பாஸ்கருக்கு பம்பாயிலேயே பெண் பார்த்து

விட்டார்கள்.பாஸ்கருக்கு திருமணம் என்று தெரிந்ததுமே, பாரதியும், நானும் அவரை கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டோம்.

ஜனவரி 26-ந்தேதி இந்திய குடியரசு தினம். அன்றுதான் பம்பாயில் பாஸ்கருக்குத் திருமணம் என்று முடிவாகியது.

ஜாதகப் பொருத்தம் பார்த்தார்களா, ஜோசியர்கள் நாள் குறித்தார்களா என்றெல்லாம் தெரியவில்லை. சாதாரணமாக, எந்த ஒரு காரியமானாலும், அம்மா ஜோசியம் பார்ப்பது வழக்கம். இதற்கும் ஜோசியம் பார்த்திருப்பார்களோ என்னவோ!

குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே, நான், பாஸ்கர், பாரதி, அம்மா, அமர் எல்லோரும் ரெயில் மூலம் பம்பாய்க்குப் போய்ச் சேர்ந்தோம். அண்ணனும் (பாவலர் வரதராஜன்) வந்து கலந்து கொண்டார்.

தமிழர்கள் வசிக்கும் தாராவியில், குடிசைகள் நிறைந்த பகுதியில், ஒரு வீட்டின் முன் சிறிய பந்தல் போடப்பட்டு இருந்தது. அக்காவின் வீட்டில் உடைகளை மாற்றிக்கொண்டு, கல்யாணத்துக்கு பாஸ்கர் தயாரானார்.

"மாப்பிள்ளை அழைப்பு'' ஊர்வலம் நடந்தது. யாரோ சரியாக வாசிக்கத் தெரியாத ஒருவர் நாயனம் வாசித்தார். மேளதாளம் முழங்க, பாஸ்கரை நடக்க வைத்து அழைத்துச் சென்றோம்.

ஒரு சாதாரணப் பந்தல். இரண்டு நாற்காலிகள் போட்டிருந்தார்கள். அதில் மாப்பிள்ளையும், பெண்ணும் உட்கார்ந்தார்கள். சுற்றிலும்

கூட்டம்.பூக்கள் கிடைக்காத பம்பாயில், எப்படியோ இரண்டு சிறிய மாலைகளை தயார் செய்திருந்தார்கள். கெட்டி மேளம் முழங்க, மணமக்கள் மாலை மாற்றிக்கொள்ள, மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட, திருமணம் நடந்தேறியது.

திருமணம் முடிந்து சென்னைக்குத் திரும்பினோம். அங்கே ஒரு பிரச்சினை.

எங்கள் வீட்டில் மேற்கு புறம் இருந்த அறையில் பாஸ்கரும், பாரதியும் வழக்கமாகப் படுப்பார்கள். அதை புதுமணத் தம்பதிகளுக்கு ஒதுக்க வேண்டி இருந்தது.

நானும், அமரும் ஹாலில் படுப்பது வழக்கம். பாரதி, எங்களுடன் ஹாலில் படுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம். ஆனால், அது பாரதிக்கு சரியாகத் தோன்றவில்லை. தனியாக வேறு ரூம் பார்த்துக்கொண்டு போக விரும்பினார்.

எது வந்தாலும் ஒன்றாக வாழ்வது என்ற உயர்ந்த நோக்கம் உள்ள நண்பர்களைக்கூட, கால நேரமும், சூழ்நிலைகளும் பிரித்து விடுகிறது

அல்லவா?பக்கத்திலேயே வேறு ரூம் பார்த்துக்கொண்டு பாரதிராஜா போய் விட்டார். சாப்பாட்டிற்கு மட்டும் வீட்டுக்கு வந்து

அம்மா அடுத்தபடியாக என் கல்யாணப் பேச்சை எடுத்தார்கள். நான் அதைக்கண்டு கொள்ளாமல், தட்டிக் கழித்து, நான் உண்டு என் வேலை உண்டு என்று போய்க்கொண்டிருந்தேன்.

முன்பே சொன்னது போல், நாள் முழுவதும் ஜி.கே.வி.யின் கம்போசிங் அல்லது ரெக்கார்டிங்கில் இருப்பேன். இரவுதான் வீடு திரும்புவேன்.

இந்தக் காலக்கட்டத்தில், மற்ற இசை அமைப்பாளர்களும் என்னை வாசிக்கக் கூப்பிட்டார்கள். மலையாளத்தில் தேவராஜன் மாஸ்டர், பாபுராஜ், ஏ.டி.உமர், தட்சிணாமூர்த்தி சுவாமி, கன்னடத்தில் விஜயபாஸ்கர், ராஜன் நாகேந்திரா, உபேந்திரகுமார், தெலுங்கில் ராஜேஸ்வரராவ், பெண்டியாலா சீனிவாசன், ராகவலு... இப்படி எல்லோருக்கும் வாசித்துக் கொண்டிருந்தேன்.

கர்நாடிக் இசை கற்பதும், ஜோசப்பிடம் மேற்கத்திய இசை பாடம் கற்பதும் தொடர்ந்து கொண்டிருந்தது. பாடல் பதிவுகளின்போது என்னை உற்சாகமாக வைத்திருந்ததே கர்நாடிக் இசை, மேற்கத்திய இசை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம்தான்.

ஆதலால், கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. கல்யாணம் செய்து கொள்வது, இசை வாழ்க்கைக்கு இடைïறாக ஆனாலும் ஆகிவிடலாம் என்ற எண்ணமும் இருந்தது. எனவே, திருமணத்தைப் பற்றி அக்கறை இல்லாமல் இருந்தேன்.

மாலையில் கடற்கரை வரை `வாக்கிங்' போவதாக இருந்தால், நானும், பாரதியும் மட்டும் போவோம். பாஸ்கர் எங்களைப் பார்ப்பார். பாரதி சிரித்துக்கொண்டே, "நாங்கள் எல்லாம் சின்னப் பசங்க. நீ இப்போது குடும்பஸ்தன்! அதனால் எங்கள் கூட வரக்கூடாது!''

என்பார்.பாஸ்கர் பொறுத் துப்பொறுத்துப் பார்த்துவிட்டு, "அட போங்கடா'' என்று கூறிவிட்டு சில சமயம் எங்களுடன் வருவார்.

அப்படி அவர் ஒரு நாள் வந்தபோது, "குடியரசு என்றால் என்னய்யா?'' என்று பாரதி வேடிக்கையாக கேட்டார்.

"மக்களாட்சி. அதாவது நம்மை நாமே ஆள்வது!'' - இது பாஸ்கர்.

"அப்படியானால் அது சுதந்திரம்தானே?''

"ஆமாம். சுதந்திரம்தான்!''

"அப்படியானால், சுதந்திரமாக இருக்க வேண்டிய நாளில் யாராவது கைதாவானா?'' என்று சிரித்தபடி கேட்டார், பாரதி.

"ஆமாய்யா! ஜனவரி 26-ந்தேதி குடியரசு தினம் - சுதந்திரமாக இருக்க வேண்டிய நாள். அன்றைக்குப் பார்த்து, எனக்கு கல்யாணம் பண்ணி வச்சு ஜெயில்லே அடைச்சுட்டீங்க!'' என்பார் பாஸ்கர்.

"தலையில் எழுதினதை மாத்த முடியுமா பாஸ்கரூ!'' என்று சிரிப்பார், பாரதி.

பாஸ்கர் எங்களுடன் வராதபோது, நானும் பாரதியும் பல்வேறு விஷயங்களை பேசிவிட்டு வருவோம்.

அப்போது, மத்திய அரசின் "தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின்'' (என்.எப்.டி.சி.) உதவியுடன் தயாரிக்கப்பட்டு வந்த "தாகம்'' என்ற படத்திற்கு பாரதிராஜா உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் திரைப்படத்துறை எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கின்றன, எவ்வளவு உன்னதமான படங்களை வெளிநாடுகளில் தயாரிக்கிறார்கள், இங்கே அப்படி இல்லையே என்று ஆதங்கத்துடன் பேசி வருந்துவோம்.

உலகத் தரத்துக்கு உயரும் வகையில் தமிழ்ப்படங்கள் வரக்கூடாதா? எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்? இந்த மாதிரி உயர்ந்த படங்களைத் தந்தால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்று ஏங்குவோம்.

ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் தயாரித்தால்தானே! தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் ஒத்துக்கொள்ள வேண்டுமே!

இல்லை; ஒரு நாள் இதெல்லாம் மாறத்தான் போகிறது!

- இப்படியெல்லாம் பேசிக்கொண்டு நடப்போம்.

அதற்குள் நிலா கடலில் இருந்து மேலே வந்து, அதன் நிழல் கடல் பரப்பில் விழ, அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

Tags:    

Similar News