என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தனுஷின் அக்கா கீதா சமூக வலைத்தளத்தில் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து தனுஷை பற்றியும் அவரது லீலைகளை பற்றியும் நிறைய பதிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தனுஷ் சில நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், தனுஷின் அக்காவும், பிரபல பல் மருத்துவருமான கீதா தனது சமூக வலைத்தளத்தில் இந்த பிரச்சினை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது, கடந்த சில மாதங்களாக நடைபெறும் பல்வேறு விஷயங்களால் எங்கள் குடும்பம் மிகவும் நொந்து போயுள்ளது. இருந்தாலும், நாங்கள் அனைவரும் மிகவும் அமைதியாகவே உள்ளோம். நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒரேயொரு நபர் தனது கடின உழைப்பும், தியாகம் செய்து எங்களுக்கு உணவு, கல்வி கொடுத்தார். அதனால், நாங்கள் இன்று நன்றாக உள்ளோம்.



    தேனியில் ஒரு சிறு கிராமத்தில் இருந்து வந்து இன்று இந்த நிலைமைக்கு உயர்ந்திருக்கிறோம். இது ஒன்றும் ஒருநாள் இரவில் நடந்துவிடவில்லை. இந்த நிலைமையை அடைய என்னுடைய சகோதரர்கள் (தனுஷ், செல்வராகவன்) கடும் விமர்சனங்கள், அவமானங்களை சந்தித்துள்ளனர்.

    தனுஷ் இன்று பெரிய நடிகர் என்றால், அது அவருடைய கடினமான உழைப்பாலேயே சாத்தியமானது. டுவிட்டரில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற நிலைமை உருவாகிவிட்டது. 12 வயது சிறுவர்கள்கூட டுவிட்டர் கணக்கு வைத்துள்ள நிலையில், இதில் ஆபாச வீடியோக்களை வெளியிடுவது வருத்தம் தருகிறது.



    சிலர் அந்த ஆபாச வீடியோக்களை வெளியிடுமாறு கேட்பது இன்னும் மோசமான ஒன்று. எங்கள் குடும்பம் நிறைய பிரச்சினைகளை சந்தித்துவிட்டது. எது நடந்தாலும் ஒன்றாகவே இருந்து போராடுவோம். நான் மிகுந்த வலியுடனும், மன வருத்தத்துடனும் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இருந்து சில காலம் வெளியேறுகிறேன்.

    யாரையும் பார்க்கவோ, பேசவோ முடியாத நிலையில் இருக்கிறேன். இதை யார் செய்தாலும் உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். அது யாருடைய உயிரையாவது மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டால், அவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரமுடியாது. வாழுங்கள், தயவு செய்து வாழ விடுங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
    நடிகை எமி ஜாக்சன் ரஜினி நடித்து வரும் ‘2.ஓ’ படத்திற்கு குட்-பை சொல்லியிருக்கிறார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    ரஜினி நடித்துவரும் ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சங்கர் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது எமி ஜாக்சன் தன்னுடைய சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டதாக அவரே தெரிவித்துள்ளார்.

    ‘2.ஓ’ படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் முதலில் ரூ.300 கோடிக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்பிறகு ரூ.450 கோடி வரை பட்ஜெட் அதிகரிக்கப்பட்டுள்ளது.



    இப்படத்தை முடித்தபிறகு ரஜினி அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தனுஷின் வுண்டார் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    ரஜினி, அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர்கள் தற்போது பிரபாஸ் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தை முடித்த கையோடு பிரபாஸ் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை சுஜித் என்பவர் இயக்கவிருக்கிறார். இப்படத்தில் பிரபாஸ் போலீஸ் கெட்டப்பில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான பட்ஜெட் ரூ.150 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷை ஒப்பந்தம் செய்யப்போவதாக கூறப்பட்டது.



    இந்நிலையில், தற்போது பாலிவுட் நடிகர்களான ஜாக்கி ஷெராப், விவேக் ஓபராய் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஜாக்கி ஷெராப், தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’ படத்தில் வில்லனாக நடித்தவர். விவேக் ஓபராய் தற்போது அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

    இவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவித்தாலும், இப்படத்தில் யார் நடிக்கிறார்கள்? என்பதை கூடிய விரைவில் அறிவிப்பார்கள் என தெரிகிறது. ஒருவேளை இருவரையும் இப்படத்தில் நடிக்க வைக்கப்போகிறார்களா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
    இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் பாடகி சுசித்ரா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் சில நடிகர்-நடிகைகளை பற்றி அவதூறு தகவல்கள் வெளியாகின. ஆனால் தன்னுடைய ‘டுவிட்டர்’ கணக்கை யாரோ முடக்கிவிட்டதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக சுசித்ரா சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    அதில் ‘அடையாளம் தெரியாத நபர் யாரோ தனது ‘டுவிட்டர்’ கணக்கை முடக்கிவிட்டதாகவும், தனது பெயரை தவறாக பயன்படுத்தி அவதூறு தகவல்களை வெளியிடுவதாகவும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்’ தெரிவிக்கப்பட்டு இருந்தது.



    இந்தநிலையில் நேற்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் அதன் தலைமை நிலைய செயலாளர் ஏ.எம்.ரசூல்மைதீன் கட்சி நிர்வாகிகளோடு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் பாடகி சுசித்ரா அவரது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நடிகர்-நடிகைகள் பற்றி அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை பதிவுசெய்து வருகிறார். இதை நிறைய இளைஞர்கள் பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. இதை பார்க்கும் இளைஞர்கள் வழிதவறி செல்ல வாய்ப்பாக அமைந்துவிடும்.

    எனவே சுசித்ரா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
    மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன். தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் பாடல்களை தொடர்ந்து வெளியிடுவேன் என்று ஜி.வி.பிரகாஷ் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டை மீட்டெடுப்பதற்காக நடந்த போராட்டத்தின் போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது நெடுவாசலில் நடக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து ‘தியாகம் செய்வோம்’ என்ற பாடலை வெளியிட்டு இருக்கிறேன்.

    தமிழர்கள் உரிமைகளை வலியுறுத்தும் இதுபோன்ற பாடல்களை தொடர்ந்து வெளியிடுவேன். ஒரு தமிழனாக தமிழர்கள் உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன். இதனால் மிரட்டல்கள் வரலாம். அதற்காக பயப்பட மாட்டேன்.



    எட்டுக்கும் மேற்பட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறேன். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நான் நடித்துள்ள ‘புரூஸ் லீ’ படம் திரைக்கு வர இருக்கிறது. இது முழு நகைச்சுவை படமாக இருக்கும். தமிழ் பட கதாநாயகனுக்கும் ஹாலிவுட் ‘ஸ்டைல்’ வில்லனுக்கும் நடக்கும் மோதலே கதை. ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி கலகலப்பான படமாக தயாராகி உள்ளது.

    இளையராஜா இசையில் பாலா இயக்கும் ‘நாச்சியார்’ படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் என்னை இன்னொரு பரிமாணத்தில் பார்க்கலாம். ராஜீவ் மேனன், வெற்றிமாறன், சசி ஆகியோர் இயக்கும் படங்களிலும் நடிக்கிறேன். இசையமைத்துக்கொண்டே நடிக்கவும் செய்வேன். இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன் கூட்டணியில் வந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    எனது இசையில் வந்த ‘உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே,’ ‘வெயிலோடு விளையாடி’ உள்ளிட்ட பல பாடல்களை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.”

    இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் கூறினார்.
    "அரங்கேற்றம்'' படத்துக்குப்பிறகு பாலசந்தரின் மகத்தான படமாக அமைந்தது, "அவள் ஒரு தொடர்கதை.'' நல்ல படம் என்ற பெயர் எடுத்ததுடன், வசூலிலும் சாதனை புரிந்தது.
    "அரங்கேற்றம்'' படத்துக்குப்பிறகு பாலசந்தரின் மகத்தான படமாக அமைந்தது, "அவள் ஒரு தொடர்கதை.'' நல்ல படம் என்ற பெயர் எடுத்ததுடன், வசூலிலும் சாதனை புரிந்தது.

    "அரங்கேற்றம்'' படத்தைத் தொடர்ந்து, பாலசந்தர் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை ஏற்ற படம் "சொல்லத்தான் நினைக்கிறேன்.''

    இது, ஆனந்த விகடனில் "மணியன்'' எழுதிய கதை. இதை மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் சேர்ந்து படமாக எடுத்தனர்.

    இந்தப் படம் தயாரானது பற்றி மணியன் எழுதியிருப்பதாவது:-

    "ஆனந்த விகடனில் நான் "இலவுகாத்த கிளி'' என்ற குறுநாவலை எழுதியிருந்தேன். அப்புறம் நானே அதை நாடக வடிவில் தயாரித்தேன். சினிமாப்படங்கள் நூறாவது நாள் கொண்டாடுவது உண்டு. நூறாவது நாள் கொண்டாடிய நாடகம் "சொல்லத்தான் நினைக்கிறேன்.''

    அப்படிப்பட்ட ஒரு வெற்றி நாடகத்தை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று நானும், வித்வான் வே.லட்சுமணனும் ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லை.

    நாங்கள் இருவருமாக பாலசந்தரிடம் போனோம். "நாங்கள் இதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில், `சொல்லத்தான் நினைக்கிறேன்' நாடகத்தைப் படமாகத் தயாரிக்க விரும்புகிறோம். நீங்கள்தான் டைரக்ட் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

    சிறிது நேரம் யோசித்தார் அவர் பிறகு, "மிஸ்டர் மணியன்! நல்ல யோசனைதான். ஆனால் இதில் நான் சம்பந்தப்பட வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள். இது ஒரு பாப்புலர் நாடகம். ஏற்கனவே நீங்கள் டைரக்ட் செய்து விட்டீர்கள். நீங்கள் இருவருமே எழுத்தாளர்கள். நானும் எழுத்தாளன். கருத்து வேறுபாடுகள் வருமே! என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டார்.

    நான் சிறிதும் தயங்கவில்லை. "இது உங்கள் குழந்தை. உங்கள் விருப்பப்படிதான் வளர்த்து உருவாக்கவேண்டும். நாங்கள் தலையிடமாட்டோம். கிரியேடிவ் ஆர்டிஸ்டுகளின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பவர்கள் நாங்கள்'' என்று பதில் சொன்னேன்.

    `சொல்லத்தான் நினைக்கிறேன்' படம் உருவாகத் தொடங்கியது. படத்தில் வரும் காட்சிகள் மறக்க முடியாதவை. படத்தைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களிலும் அவை அழியாமல் பதிந்து போயிருப்பது எனக்குத் தெரியும்.''

    இவ்வாறு மணியன் குறிப்பிட்டுள்ளார்.

    "சொல்லத்தான் நினைக்கிறேன்'' 1973 டிசம்பர் 7-ந்தேதி வெளிவந்த படமாகும். இந்தப் படத்தில் சிவகுமார் கதாநாயகன். கமலஹாசன் வில்லன். மற்றும் லட்சுமி, ஜெயசித்ரா, ஜெயசுதா ஆகியோர் நடித்தனர்.

    பின்னர் ஜெமினிகணேசன் சொந்தமாகத் தயாரித்த "நான் அவனில்லை'' என்ற படத்தை பாலசந்தர் இயக்கினார்.

    இதில் ஜெமினிகணேசன், ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் ஒவ்வொரு பெயர் வைத்துக்கொண்டு, பல பெண்களைத் திருமணம் செய்து கொள்வார். மாறுபட்ட மேக்கப்களில் அற்புதமாக நடித்தார். ஜெமினிகணேசனின் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்திய படம் இது.

    இதன்பின் அரங்கண்ணல் தயாரிக்க பாலசந்தர் இயக்கிய படம் "அவள் ஒரு தொடர்கதை.''

    வானொலியில் பணியாற்றியவரும், எழுத்தாளர் "சுகி'' சுப்பிரமணியத்தின் மகனுமான எம்.எஸ்.பெருமாள் "வாழ்க்கை அழைக்கிறது'' என்ற பெயரில் எழுதிய குறுநாவல்தான் "அவள் ஒரு தொடர்கதை'' என்ற பெயரில் படமாகியது. திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.

    வேலைக்குச் செல்லும் பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதை. தன் குடும்பத்துக்காக, திருமணம் செய்து கொள்ளாமல் வேலைக்குச் செல்லும் பெண்ணாக சுஜாதா பிரமாதமாக நடித்தார். மற்றும் விஜயகுமார், ஜெய்கணேஷ், கமலஹாசன், ஜெய்சித்ரா, `படாபட்' ஜெயலட்சுமி ஆகியோர் நடித்தனர்.

    இளம் வயது கமலஹாசன், உள்ளத்தைத் தொடும் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். "கடவுள் அமைத்து வைத்த மேடை...'' என்ற பாடல் காட்சியை பிரமாதமாக படமாக்கியிருந்தார், பாலசந்தர்.

    13-11-1974-ல் வெளிவந்த "அவள் ஒரு தொடர்கதை'' மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது. அது மட்டுமல்ல, "மக்கள் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் படம் அமையவேண்டும்'' என்ற லட்சியத்தில், பாலசந்தர் முழு வெற்றி பெற்றார்.

    "அரங்கேற்றம்'' தமிழ்ப்பட உலகில் எப்படி ஒரு மைல்கல்லோ, அது போல மற்றொரு மைல்கல் "அவள் ஒரு தொடர்கதை.''

    இது இந்தி, தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் படமாகியது.

    இந்தக் காலக்கட்டத்தில் பாலசந்தர் ரொம்பவும் "பிசி''யாக இருந்தார். இரவு -பகல் என்று பாராமல் படப்பிடிப்பில் ஈடுபட்டார்.

    இரவில் எவ்வளவு தாமதமாக படுக்கச் சென்றாலும், காலை 6 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்து விடுவார். சிற்றுண்டிக்குப்பின் காலை 9 மணிக்கு படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவார்.

    பாலசந்தர், ஆரம்ப காலத்தில் அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டே, லீவு போட்டுவிட்டு சினிமா படங்களில் பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில், "சினிமாவா? வேலையா?'' என்று முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தது.

    பட அதிபர் ஏவி.மெய்யப்ப செட்டியாரை சந்தித்து இதுபற்றி ஆலோசனை கேட்டார். "வேலையை விட்டு விட்டு, சினிமாவுக்கு வந்துவிடலாமா? அதில் நான் வெற்றி பெறமுடியுமா? உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டார்.

    அப்போது ஏவி.எம்., "உங்கள் திறமையில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? உங்கள் திறமையில் உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால், நான் இப்பொழுதே வருடத்திற்கு 3 படங்கள் நீங்கள் தயாரிப்பதற்கு 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன்'' என்று கூறினார்.

    இதனால் பாலசந்தருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு படத்தொழிலில் தீவிரமாக இறங்கினார்.

    ராகவா லாரன்ஸ் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது என்று வெளிவந்த செய்திக்கு பைனான்சியர் போத்ரா விளக்கம் அளித்துள்ளார். அந்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடை கோரி பைனான்சியர் போத்ரா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை இன்னமும் ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் தவிக்கின்றனர்.

    இந்நிலையில், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அப்படத்தை வருகிற மார்ச் 10-ந் தேதி ரிலீஸ் செய்யப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.



    இந்த செய்தியை அறிந்ததும் பைனான்சியார் போத்ரா இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு எதிராக நான் தொடுத்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது.

    அவர்கள் தரப்பிலிருந்து இன்னமும் எனக்கு கொடுக்கவேண்டிய பணத்தை திருப்பித்தரவில்லை. அதை அவர்கள் தரும்வரையிலும் இப்படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று கூறியுள்ளார். 
    தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நிற்பது குறித்து விஷால் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதை கீழே விரிவாக பார்ப்போம்.

    நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் விரைவில் நடைபெறவிருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது,

    நடிகர் சங்க தேர்தலின்போது நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அடுத்த மாதம் நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்க இருக்கிறது. நடிகர் சங்கத்தில் இருக்கிற நான் தயாரிப்பாளர் சங்கத்திலும் போட்டியிட காரணம் என்னவென்று கேட்கிறார்கள்.



    என்னுடைய அப்பா நிறைய படங்களை தயாரித்தார். நான் சிறுவனாக இருந்தபோது, தயாரிப்பாளர் சங்கத்திடம் தன்னுடைய படத்தை ரிலீஸ் பண்ணித் தருமாறு பிச்சை எடுத்தார். அதுதான் இன்று என்னை தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட வைத்ததற்கு ஒரு காரணம் என்றுகூட கூறலாம்.

    என்னுடைய அப்பாவுக்கு நடந்தது இனிமேல் எந்த தயாரிப்பாளருக்கும் நடக்கக்கூடாது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க அயராது பணியாற்றுவேன். தயாரிப்பாளர்கள் ஒவ்வொருக்கும் சொந்தமாக நிலம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் அவர் கூறினார்.

    ஆபாச வீடியோவில் இருப்பது சஞ்சிதா ஷெட்டிதானா? என்பது குறித்து சமூக வலைத்தளத்தில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    கடந்த சில நாட்களாக பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி தமிழ் சினிமா வட்டாரத்தை மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு மூடப்பட்டு விட்டாலும், அவரது பெயரில் மேலும் ஒரு டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு, முன்னணி நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு திரையுலக பிரபலங்களிடையே மிகப்பெரிய அச்சத்தை கொடுத்துள்ளது. அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களில் இருந்த சில நடிகைகள் அது தாங்கள் இல்லை என்பதுபோல் தங்களது விளக்கத்தையும் அளித்துள்ளனர். அவர்களின் சஞ்சிதா ஷெட்டியும் ஒருவர்.



    சுசித்ரா டுவிட்டரில் வெளியான ஆபாச வீடியோக்களில், ‘சூது கவ்வும்’, ‘ரம்’, ‘என்னோடு விளையாடு’ உள்ளிட்ட படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டியின் வீடியோவும் ஒன்று. அந்த வீடியோவில் இருப்பது சஞ்சிதா ஷெட்டி என்ற அறிவிப்போடு வெளிவந்த அந்த வீடியோவை பார்த்ததும் சஞ்சிதா ஷெட்டி கொஞ்சம் அதிர்ந்துதான் போனார். உடனடியாக, ஒரு வீடியோவை பதிவு செய்து, அந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது என்று தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டார்.
    எப்போதும், இதுபோன்ற வீடியோக்கள் வெளிவரும்போது அனைத்து நடிகர்களும் சொல்லும் விஷயங்கள்தான். ஆனால்,  சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் கிரியேட்டர்கள் இந்த விவகாரத்தை எளிதில் விடவில்லை. அந்த வீடியோவில் உள்ளது சஞ்சிதா ஷெட்டிதான் என்பதற்கான ஆதாரத்தை ஆணித்தரமான வாதங்கள் மூலம் மீம்ஸ்களாக உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள்.



    அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணிண் வலது புருவத்தின் கீழே ஒரு மச்சம் இருக்கிறது. அதேபோல், அந்த இடது கையில் வளையம் போன்ற ஒரு மோதிரம் உள்ளது. இந்த இரண்டையும் வைத்தும், சஞ்சிதா ஷெட்டியின் புகைப்படத்தையும் வைத்து பார்க்கும்போது, அது சஞ்சிதா ஷெட்டியோடு ஒத்துப் போகிறது என அவர்கள் நியாயம் பேசுகின்றனர். அந்த ஆதாரத்திற்குண்டான புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.
    அட்லியின் படத்தில் விஜய் கிராமத்து தலைவராக நடிப்பதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ‘தெறி’ படத்தை இயக்கிய அட்லியுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

    விஜய் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிப்பதும் உறுதி செய்யப்பட்டது. விஜய் இப்படத்தில் பஞ்சாப் சிங் வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது, அவர் நடிக்கும் இன்னொரு வேடமும் வெளியாகியுள்ளது. அதாவது கிராமத்து ஊர் தலைவராக விஜய் இப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



    சமீபத்திய படப்பிடிப்பில் மதுரையில் 80-களில் நடப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாம். அதில், விஜய் மானுரை என்ற கிராமத்தை சேர்ந்த ஊர் தலைவராக நடித்தாராம். கதைப்படி ஊர் மக்களிடம் பெரும் செல்வாக்கு வைத்திருக்கும் விஜய், அவர்களுக்கு இலவசமாக பள்ளி, மருத்துவமனைகள் கட்டிக்கொடுப்பபது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இதை தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யராஜ், வடிவேலு, சத்யன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. இப்படத்தில் நிக்கி கல்ராணி சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை தயாரித்துள்ளார். வேந்தர் மூவிஸ் மதன் மற்றும் சிவபாலன் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடவுள்ளது.

    முன்னதாக, இப்படம் பிப்ரவரி 17-ந் தேதியே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தை வெளியிடும் மதன் பைனான்சியர் போத்ரா என்பவரிடம் வாங்கியிருந்த பணத்தை திருப்பி தரவில்லை என்பதால், படத்தை ரிலீஸ் செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்தார். அதனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளிவாரமல் தள்ளிப்போனது.



    மறுபடியும், பேச்சுவார்த்தை நடத்தி கடந்த வாரம் ரிலீஸ் செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அதுவும் முடியாமல் போனது. இந்நிலையில், போத்ரா கொடுத்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. எனவே, வருகிற மார்ச் 10-ந் தேதி ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    ஏற்கெனவே, மார்ச் 10-ந் தேதி வெளியீட்டில் ஜி.வி.பிரகாஷின் ‘புருஸ்லீ’, ‘மாநகரம்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘நிசப்தம்’ ஆகிய படங்கள் மோதுகின்றன. தற்போது ராகவா லாரன்சும் இதில் இணைந்துள்ளதாக செய்திகள் கூறுகிறது. 
    ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால், நாயகனாக இந்தியில் களமிறங்கிய ‘கமாண்டோ’ படத்தின் இரண்டாம் பாகம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. அந்த படம் எப்படி? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    இந்தியாவில் பெரும் சர்ச்சைக்கு ஆளான 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புடன் படம் தொடங்குகிறது. இந்த அறிவிப்புக்கு பின்பு, இந்தியாவில் பெரிய புள்ளிகளின் கருப்பு பணங்கள் மத்திய அரசின் சிக்குகிறது. இந்நிலையில், வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பெரிய புள்ளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட விக்கி சத்தா என்பவன் மலேசியாவில் பிடிபடுகிறான்.

    அவனை இந்தியாவுக்கு கொண்டுவர இந்தியாவிலிருந்து நான்கு பேர் கொண்ட குழுவை அனுப்ப மத்திய அரசு திட்டமிடுகிறது.  விக்கி சத்தா இந்தியா கொண்டுவரப்பட்டால் தான் மட்டுமில்லாது, தன்னை சார்ந்த நிறைய பேர் பிரச்சினையில் சிக்கக்கூடும் என்று நினைக்கும் மத்திய உள்துறை மந்திரியின் மகன், விக்கி சத்தாவை மலேசியாவிலேயே தீர்த்துக்கட்ட நினைக்கிறார்.



    அதனால், உள்துறை மந்திரியான தனது அம்மாவிடம் விக்கி சத்தாவை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அரசியலிலேயே பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி தனக்கு சாதகமான நான்கு பேரை, விக்கி சத்தாவை மீட்டுக் கொண்டு வருவது என்று மத்திய அரசு சார்பில் நியமிக்க வைக்கிறார். அந்த குழுவில் இன்ஸ்பெக்டரான நாயகி அடா சர்மாவும் இணைகிறார்.

    இதையெல்லாம் அறிந்த, இண்டர்போல் ஆபிசரான நாயகன் வித்யூ ஜம்வால், விக்கி சத்தாவை உயிரோடு இந்தியாவுக்கு அழைத்து வரவேண்டும் என்று முடிவு செய்கிறார். அதன்படி, அந்த நான்கு பேரில் ஒருவரை சாதுர்யமாக பின்வாங்க வைத்து, அந்த குழுவில் இணைந்து மலேசியாவுக்கு புறப்படுகிறார்.

    மலேசியாவுக்கு சென்ற வித்யூத் ஜம்வாலை சந்திக்கும் விக்கி சத்தாவின் மனைவியான இஷா குப்தா, தாங்கள் நிரபராதி என்றும், தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க உதவுவதாக வாக்குறுதி அளித்தால், உண்மையான குற்றவாளியை கண்டுபிக்க தான் உதவுவதாக அவள் கூறுகிறாள். இதனை நம்பும் வித்யூத் ஜம்வால் அவளுடன் செல்கிறார்.



    இறுதியில் வித்யூத் ஜம்வால், விக்கி சத்தாவை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று தன்னுடன் வந்திருக்கும் மூன்று பேரையும் மீறி விக்கி சத்தாவை இந்தியா கொண்டு வந்தாரா? விக்கி சத்தா உண்மையான குற்றவாளி இல்லையென்றால், உண்மையான குற்றவாளி யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு பிற்பாதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

    படத்திற்கு பெரிய பலமே வித்யூத் ஜம்வாலின் ஆக்ஷன்தான். நடிப்பு பெரியதாக எதிர்பார்க்கமுடியாவிட்டாலும் ஹாலிவுட் ஸ்டார்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். இவர் செய்யும் சில ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் நம்மை படபடக்க வைக்கிறார். ரொமான்ஸ் காட்சியிலும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறார்.



    இன்ஸ்பெக்டராக வரும் அடால் சர்மா ரசிக்க வைக்கிறார். இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இந்தியில் வெளிவந்த ‘கமாண்டோ’ படமே தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்திருப்பதால், இந்தி நட்சத்திரங்களே பெரும்பாலும் நடித்திருக்கிறார்கள். வித்யூத் ஜம்வால் மட்டும் தமிழில் ’துப்பாக்கி’ படத்தில் நடித்திருப்பதால், அவர் மட்டுமே நமக்கு அறிமுகமாக தெரிகிறார். அதனால், மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் பெரும்பாலும் அறிமுகம் இல்லாவிட்டாலும், அவர்கள் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

    கறுப்பு பணத்தை மையமாக வைத்து அறிமுக இயக்குனர் தேவன் போஜனி இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் தலைப்புப் போலவே ஆக்ஷனை மையமாக வைத்து இப்படத்தை கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் பிரியர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும். அதேபோல், மலேசியாவில் உண்மையான குற்றவாளியை பிடிக்க வித்யூத் ஜம்வால் வகுக்கும் வியூகங்கள் எல்லாம் வியக்க வைக்கிறது.

    சிரந்தன் தாஸின் ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளில் பலே சொல்ல வைத்திருக்கிறது. பிரசாத் சாஸ்தேவின் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. மன்னன் ஷாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான்.

    மொத்தத்தில் ‘கமாண்டோ’ ஆக்ஷன் பிரியர்களுக்கு மட்டும்.
    ×