என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    8-வது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற படங்கள் மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    8-வது நார்வே தமிழ் திரைப்பட விழா, வருகிற ஏப்ரல் 27-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நார்வேயின் தலைநகராக ஓஸ்லோவில் நடைபெறவிருக்கிறது. இந்த திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவை சேர்ந்த நிறைய திரைப்படங்கள் போட்டியிட்டன. இந்த போட்டியில் தற்போது வெற்றிபெற்ற திரைப்படங்கள் மற்றும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த பட்டியல் கீழே.

    சிறந்த படம் - ஜோக்கர்
    சிறந்த இயக்குனர் - வெற்றிமாறன் (விசாரணை)
    சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி (தர்மதுரை)
    சிறந்த நடிகை - வரலட்சுமி (தாரை தப்பட்டை)
    சிறந்த இசையமைப்பாளர் - ஷான் ரோல்டன் (ஜோக்கர்)



    சிறந்த தயாரிப்பு - உறியடி
    சிறந்த பாடலாசியரியர் - உமா தேவி (கபாலி)
    சிறந்த வில்லன் - ஆர்.கே.சுரேஷ் (தாரை தப்பட்டை)
    சிறந்த துணை நடிகர் - சமுத்திரகனி (விசாரணை)
    சிறந்த துணை நடிகை - பூஜா தேவரியா (குற்றமே தண்டனை)
    சிறந்த ஒளிப்பதிவு - எஸ்.ஆர்.கதிர் (கிடாரி)
    சிறந்த திரைக்கதை - கார்த்திக் நரேன் (துருவங்கள் பதினாறு)
    சிறந்த பின்னணி பாடகர் - பிரதீப் குமார் (மாயநதி - கபாலி)
    சிறந்த பின்னணி பாடகி - நந்தினி ஸ்ரீகர்
    சிறந்த எடிட்டர் - ஸ்ரீஜித் சரண் (துருவங்கள் பதினாறு)
    சிறந்த சமூக விழிப்புணர்வு விருது - அம்மணி
    இயக்குனர் பாலுமகேந்திரா விருது - எஸ்.ஜே.சூர்யா (இறைவி)
    நடிகர் கே.எஸ்.பாலச்சந்திரன் விருது - யோகி பாபு (ஆண்டவன் கட்டளை)
    கலைச்சிகரம் விருது - பிரபு சிவாஜி கணேசன்
    வாழ்நாள் சாதனையாளர் விருது - டி.ராஜேந்தர்
    பணமோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் கோடிக்கணக்கில் பணம் வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் கமிஷன் வாங்கிக்கொண்டு, ஏமாற்றிவிட்டார் என்று சென்னை போலீசாரால் கடந்த 2013-ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு, பின்னர் வெளியே வந்தார்.

    இதேபோல், ஆந்திர தொழிலதிபர் ஒருவரும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பணமோசடி புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அந்த வழக்கின் அடிப்படையிலும் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து நிறைய பேர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது அடுக்கடுக்கான புகார்கள் கொடுத்த வண்ணம் இருந்தனர்.



    அவர்கள் வரிசையில் புளுகோஸ் கட்டமைப்பு நிறுவனம் நடத்தி வந்த திலீப் பத்வானியிடமும் ரூ.1000 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் கமிஷனாக ரூ.5 கோடியை வாங்கிய பவர் ஸ்டார் சீனிவாசன், வழக்கம்போல் அவரையும் ஏமாற்றிவிட்டதாக டெல்லி போலீசாரிடம் கடந்த 2013-ஆம் ஆண்டு திலீப் புகார் கொடுத்திருந்தார்.

    அந்த புகாரின் அடிப்படையில், அப்போதே டெல்லி போலீசார் சென்னை வந்து பவர் ஸ்டார் சீனிவாசனை விசாரணைக்காக டெல்லி அழைத்து சென்றனர். அதன்பிறகு, அந்த புகார் மீதான நடவடிக்கை குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. பவர் ஸ்டார் சீனிவாசனும் சிறையில் இருந்து வெளியே வந்து படபிடிப்புகளில் கலந்துகொண்டு நடித்து வந்தார்.

    இந்நிலையில், இன்று பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் சென்னையில் திடீரென கைது செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பண மோசடி வழக்கிலேயே பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைதுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. யார் கொடுத்த புகாரின் பேரில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

    ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கான தடை நீங்கியுள்ளது. அதன்படி, புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் திரைக்கு வருவதில் சிக்கல் வெளியானது. இப்படத்தை வெளியிடுபவர்களில் ஒருவரான வேந்தர் மூவிஸ் மதன், பைனான்சியர் போத்ராவிடம் வாங்கிய ரூ.11 கோடி கடனை திருப்பிக் கொடுக்காததால், இப்படத்தை வெளியிட தடை வாங்கியிருந்தார் போத்ரா. இதனால், இந்த படம் ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்வாங்கப்பட்டது.

    இந்நிலையில், இப்படத்திற்கு எதிராக போத்ரா தொடர்ந்திருந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, தற்போது இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிரம் காட்டியுள்ளனர். அதன்படி, வருகிற மார்ச் 9-ந் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.



    ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் ரமணி இப்படத்தை இயக்கியுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை தயாரித்துள்ளார். சிவபாலன் பிக்சர்ஸ் மற்றும் வேந்தர் மூவிஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை வெளியிடவுள்ளது.
    பிரபல வீணை இசை கலைஞரும், பாடகியுமான வைக்கம் விஜயலட்சுமி உலக சாதனை படைக்கும் விதத்தில் 5 மணி நேரம் தொடர்ந்து வீணையை மீட்டியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, வீணை கலைஞரும் கூட. இவர் பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் இவரே வீணை வாசிப்பதை வழக்கமாக கொண்டவர். பிறவியிலேயே கண்பார்வையற்ற வைக்கம் விஜயலட்சுமிக்கு சமீபத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. ஆனால், ஒருசில காரணங்களால் வைக்கம் விஜயலட்சுமியே அந்த திருமணத்தை நிறுத்தினார்.

    அந்த சோகமும், வருத்தமும் எதுவும் தன்னை பாதித்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும்வகையில், கின்னஸ் சாதனையொன்றை நிகழ்த்தி காட்டியுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி. கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொடர்ந்து 5 மணி நேரம் இடைவிடாமல் காயத்ரி வீணையால் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தியுள்ளார்.



    இதில், மலையாளம், தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவர் பாடிய பாடல்களும், 12 கீர்த்தனைகளும் அடங்கும். இவருடைய இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், வைக்கம் விஜயலட்சுமியோ, என்னுடைய குரு, பெற்றோர்கள், நலம் விரும்பிகளின் கனவை நனவாக்க முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார்.
    கதிர் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு இன்று வெளியிடவுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்..
    ‘மதயானைக்கூட்டம்’, ‘கிருமி’, ‘என்னோடு விளையாடு’ ஆகிய மாறுபட்ட கதைக்களத்தை கொண்டு உருவான படங்களில் நடித்தவர் கதிர். இவருடைய ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் தனித்து பேசப்படும். இந்த படங்களை தொடர்ந்து மாதவன்-விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விக்ரம் வேதா’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

    இதற்கிடையில், ‘சிகை’ என்கிற படத்தில் பெண் வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் ஆச்சர்யத்தை கொடுத்தது. பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்திலும் விரைவில் நடிக்கவுள்ளார்.



    இந்நிலையில், கதிர் அடுத்தாக ஒரு புதிய படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் கூடுதல் விவரங்கள் இன்று வெளியிடப்படுகிறது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டு உள்ளதாக பாடகி சுசித்ரா கூறியுள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களை டுவிட்டரில் வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள சினிமா பின்னணி பாடகி சுசித்ரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-

    “எனது டுவிட்டர் பக்கத்தை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு ‘புளூ டிக்’ கிடையாது என்பதால் யார் வேண்டுமானாலும் ஊடுருவ முடியும். அப்படித்தான் ‘ஹேக்’ செய்து முடக்கிவிட்டனர். இதை செய்தவர்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபோல் எனது கணவர் உள்ளிட்ட மேலும் பலருடையை டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.

    ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது எனது பேஸ்புக்கை ஹேக் செய்தனர். இப்போது டுவிட்டரை முடக்கி இருக்கிறார்கள். டுவிட்டர் நிர்வாகத்திடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து எனது பக்கத்தை மூடும்படி கடிதம் அனுப்பினேன். 2 நாட்களுக்கு முன்பு ஸ்டூடியோவுக்கு சென்று பாடல் ஒலிப்பதிவை முடித்து விட்டு இரவில் வந்து வீட்டில் தூங்கினேன். காலை 9 மணிக்கு தனுஷ் அலுவலகத்தில் இருந்து போன் செய்து உங்கள் டுவிட்டர் கணக்கு மீண்டும் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

    அப்போதுதான் படங்களை கவனித்தேன். அவற்றை அதில் இருந்து நீக்க முயற்சித்தேன். ஆனால் தொடர்ந்து அவை பதிவிடப்பட்டபடி இருந்தன. இதனால் எனது சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. டுவிட்டரில் என்னை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்வதால் சிலர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை காட்ட எனது டுவிட்டரை பயன்படுத்தி உள்ளனர்.



    யாருக்கு யார் மீது பொறாமை இருக்கிறது. யாரை பழிவாங்குவதற்காக இவற்றை வெளியிடுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நானும் எனது கணவர் கார்த்திக்குமாரும் கடந்த 10 வருடங்களாக குடும்ப வாழ்க்கை நடத்தினோம். ஆனால் இப்போது அந்த வாழ்க்கை நன்றாக இல்லை. திருமண வாழ்க்கை விவாகரத்து நோக்கி செல்கிறது. எனது சொந்த வாழ்க்கையையும் இப்போது தெருவுக்கு கொண்டு வந்து விட்டார்கள். ஒருவரை வெறுத்தால் கூட மனிதாபிமானமில்லாமல் நடக்கக்கூடாது.

    நான் இப்போது சென்னையில்தான் இருக்கிறேன். திரிஷா நடிக்கும் படத்தில் பாடுகிறேன். அந்த பாடலை ஒலிப்பதிவு செய்து விட்டுத்தான் வந்தேன். ஆனால் நான் மருத்துவமனையில் இருப்பதாக பேசுகிறார்கள். பாடல் பதிவில் இருந்தேனா அல்லது மருத்துவமனையில் இருந்தேனா என்பதை இசையமைப்பாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது உண்மைதானா என்று கேட்கிறார்கள். அது எனது சொந்த வாழ்க்கை விவாகரத்துடன் சம்பந்தப்பட்டது. எனவே அதுபற்றி விளக்கமாக பேச விரும்பவில்லை. ஆனாலும் என்னை சில நாட்களுக்கு முன்பு நிர்ப்பந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அது என்னுடையை விவாகரத்துடன் தொடர்பு உள்ள விஷயம்.

    எனக்கு எதிரிகள் இல்லை. நண்பர்கள் தான் அதிகம் உண்டு. டுவிட்டர் சர்ச்சையில் எனது கணவர் எனக்கு எதிராக செயல்படவில்லை. அவர் தங்கமான மனிதர். பூமியில் ராமரைப்போல் அவரை பார்க்கிறேன். ஆனாலும் நாங்கள் தீர்வுகாண முடியாத ஒரு பிரச்சினை காரணமாக விவாகரத்து செய்யப்போகிறோம்.

    இவ்வாறு சுசித்ரா கூறினார்.

    பாடகி சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் வெளியான ஆபாச சர்ச்சை படங்கள் குறித்து நடிகை திரிஷா கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
    சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் இரண்டு வாரமாக நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும் படுக்கை அறை அந்தரங்க வீடியோக்களும் அடுக்கடுக்காக குவிந்து திரையுலகை பரபரப்பாக்கியது. நடிகர் தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்டிரியா, ஹன்சிகா ஆகியோர் பெயர்களில் படங்கள் வெளியிடப்பட்டது. அனுயா, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரின் ஆபாச படங்கள் வெளிவந்தன. டைரக்டர் செல்வராகவன் லீலை என்ற பெயரில் அவரும் ஆண்ட்ரியாவும் பேசிக்கொள்வது போன்ற ஆடியோ உரையாடலும் வெளியானது.

    நடிகை அமலாபால், பார்வதி நாயர் உள்ளிட்ட மேலும் பலரது படங்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. இதனால் நடிகர் நடிகைகள் அதிர்ச்சியானார்கள். தொடர்ச்சியாக மது விருந்து நிகழ்ச்சியில் தனுஷ், தமன்னா, பூனம்பாஜ்வா ஆகியோர் ஆடுவது போன்ற வீடியோவும் வெளியானது. நடிகர்-நடிகைகள் மது அருந்தும் காட்சிகள் அதில் இடம்பெற்று இருந்தன.

    இதனால் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் குவியத்தொடங்கினார்கள். அதில் வெளியாகும் படங்களை பதிவிறக்கம் செய்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பினார்கள். சுசித்ரா, நடிகர்- நடிகைகள் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சியொன்றில் தாக்கப்பட்டதாகவும் அதற்கு பழிவாங்குவதற்காகவே இந்த ஆபாச படங்களை அவர் வெளியிட்டு வருவதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சுசித்ரா மறுத்தார்.

    தனது டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ‘ஹேக்’ செய்து ஊடுருவி இந்த படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்கள் என்றும் நடிகர்-நடிகைகள் மீதான வன்மத்தை காட்ட எனது டுவிட்டரை அவர்கள் மேடையாக பயன்படுத்துகின்றனர் என்றும் கூறினார். பின்னர் திடீரென்று டுவிட்டர் கணக்கை மூடிவிட்டு வெளியேறி விட்டார்.



    ஆனாலும் புதிதாக சுசித்ரா பெயரில் பல டுவிட்டர் பக்கங்கள் முளைத்துள்ளன. அவற்றில் தொடர்ந்து ஆபாச படங்கள் வெளியாகி வருகிறது. நடிகர்-நடிகைகளின் அந்தரங்க படங்கள் மர்ம நபர்களுக்கு எப்படி கிடைத்தன என்பது மர்மமாக உள்ளது. திரையுலகில் இருப்பவர்களே இந்த படங்களை வெளியிட்டு வருகிறார்களா? அல்லது மர்ம நபர்கள் ஹேக் செய்து திருடி வெளியிடுகிறார்களா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் சுசித்ரா டுவிட்டரில் வெளியான தனது படம் குறித்து நடிகை திரிஷா கருத்து வெளியிட்டு உள்ளார். டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    “பழிவாங்க வேண்டிய தேவை இல்லை. அமைதியாக உட்கார்ந்து காத்திருங்கள். உங்களை காயப்படுத்தியவர் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்வார். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் அதை பார்க்கும் வாய்ப்பை கடவுள் உங்களுக்கு அளிப்பார்.”

    இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.

    கர்மா(முன்வினை) என்ற தலைப்பில் இந்த கருத்தை அவர் பதிவிட்டு இருக்கிறார். நடிகை சஞ்சிதா ஷெட்டி, “ஆபாச படத்தில் இருப்பது நான் இல்லை” என்று மறுத்து இருக்கிறார்.
    தொழில் அதிபராக மாறப்போகிறேன். ஓட்டல் தொழிலில் ஈடுபடுவேன் என்று நடிகை அமலாபால் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நடிகை அமலாபால் அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-

    கேள்வி:- தனுசுடன் அதிக படங்களில் நடிக்கிறீர்களே?

    பதில்:- தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தேன். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும், வட சென்னை படத்திலும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம். தனுஷ் எனக்கு பிடித்த நடிகர். அவரிடம் பலவிதமான திறமைகள் இருக்கிறது. கதை மற்றும் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்து நடிப்பார். தனுஷ் படங்கள் என்றால் அவர் நினைவுக்கு வரமாட்டார். அவரது கதாபாத்திரங்கள்தான் கண்முன் வரும். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் திறமையாக நடித்து விடுவார்.

    ரேவதி இயக்கத்தில் மலையாளத்தில் தயாராகும் குயின் இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறேன். சிறுவயதில் ரேவதி படங்களை பார்த்துதான் வளர்ந்து இருக்கிறேன். எனக்கு பிடித்தமான நடிகை. அவர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருட்டுபயலே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறேன்.

    கேள்வி:- வடசென்னை படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறீர்களா?

    பதில்:- அது ஒரு காலகட்டத்தில் நடக்கும் படமாக தயாராகிறது. படப்பிடிப்பு அரங்குகளும் அந்த காலகட்டத்துக்கு ஏற்றமாதிரி இருக்கும். இதில் நான் வட சென்னை பெண்ணாக வருகிறேன். கதை கேட்டதும் இரண்டு நாட்கள் கதாபாத்திரமாகவே வாழ்ந்தேன். சவாலான வேடம்தான்.



    கேள்வி:- டைரக்டர் விஜய்யை விவாகரத்து செய்து இருக்கிறீர்கள். மீண்டும் இருவரும் சேர வாய்ப்பு இருக்கிறதா?

    பதில்:- அதுபற்றி எப்படி சொல்ல முடியும். வாழ்க்கையில் பல நிலைகள் இருக்கிறது. தெரியாத விஷயங்களை கற்பனை செய்ய முடியாது.

    கேள்வி:- விஜய் மீது உங்களுக்கு கோபம் இருக்கிறதா?

    பதில்:- இல்லை. இப்போதும் எனக்கு பிடித்தவராகவே அவரை பார்க்கிறேன். நாங்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் அற்புதமான விஷயங்களை கற்று இருக்கிறோம்.

    கேள்வி:- நடிப்பு மீது விரக்தி ஏற்படுகிறதா?

    பதில்:- நான் சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். நடிப்பது மிகவும் பிடிக்கிறது. படப்பிடிப்பு அரங்குகளை எனது வீடு மாதிரி பார்க்கிறேன். பகல் இரவில் ஓய்வில்லாமல் கூட நடிக்கிறேன். நடிப்பில் எப்போதுமே சோர்வு வந்தது இல்லை. சினிமாவில் நடிப்பதற்காகவே வாழ்கிறேன்.

    கேள்வி:- எதிர்கால திட்டம் என்ன?

    பதில்:- தொழில் அதிபராக மாற திட்டமிட்டு இருக்கிறேன். இந்த சமுதாயம் எனக்கு நிறைய கொடுத்து இருக்கிறது. அதற்கு திருப்பி கொடுக்க வேண்டியது எனது கடமை. சென்னையில் ஓட்டல் தொடங்க இருக்கிறேன். அந்த ஓட்டலில் யோகா, தியானம் கற்றுக்கொடுக்கும் மையங்களையும் அமைத்து பயிற்சி அளிக்கப்படும். ஆரோக்கியமானதாக எனது வாழ்க்கை முறையை மாற்றவும் முடிவு செய்துள்ளேன்.

    இவ்வாறு அமலாபால் கூறினார்.
    டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு.
    டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு.

    "அபூர்வ ராகங்கள்'' கதை புதுமையானது. விக்கிரமாதித்தன் கதையில், விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பல விடுகதைகளை போடும்.

    தந்தையும், மகனுமான இருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, மணலில் இரண்டு பெண்கள் நடந்து சென்ற கால் தடங்களைப் பார்க்கிறார்கள். அந்த கால் தடங்களை பின்பற்றிச் சென்று அந்த இருவரையும் கண்டுபிடிப்பது என்றும், பெரிய கால் தடத்துக்கு உரியவளை தந்தையும், சிறிய கால் தடத்துக்கு உரியவளை மகனும் திருமணம் செய்து கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள்.

    அவ்வாறே, கால் தடங்களை பின்பற்றிச் செல்லும் தந்தையும், மகனும் அந்த 2 பெண்களையும் கண்டுபிடிக்கிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், பெரிய பாதங்களுக்கு உரியவள் மகள். சிறிய பாதங்களுக்கு உரியவள் தாய்!

    ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த இரு பெண்களையும் தந்தையும், மகனும் மணந்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உறவு முறை என்ன?'' - இதுதான் வேதாளத்தின் விடுகதை.

    அதற்கு விடை கூறமுடியாமல் விழிப்பான், விக்கிரமாதித்தன்.

    வேதாளத்தின் விடுகதையை அடிப்படையாக வைத்து, அபூர்வராகங்கள் கதையைப் பின்னினார் பாலசந்தர்.

    இதில் ஸ்ரீவித்யா தாய்; ஜெயசுதா மகள்.

    மேஜர் சுந்தரராஜன் தந்தை; கமலஹாசன் மகன்.

    ஸ்ரீவித்யாவை கமலஹாசன் காதலிப்பார்.

    மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதாவை மணக்க விரும்புவார்!

    கத்திமேல் நடப்பது போன்ற கதை.

    கடைசியில், ஸ்ரீவித்யாவின் காணாமல் போன கணவன் திரும்பி வருவார். அவர்தான் ரஜினிகாந்த்!

    கொஞ்ச நேரமே வந்தாலும், கதையை முடித்து வைக்கும் கதாபாத்திரம்!

    தாடி -மீசையுடன், ஸ்ரீவித்யாவின் பங்களா கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவார், ரஜினிகாந்த்.

    "யார் இந்தப் புதுமுகம்?'' என்று படம் பார்க்கிறவர்கள் கேட்கும்படியாக அமைந்தது, அக்காட்சி.

    கர்நாடகத்தை சேர்ந்தவர். கறுப்பு நிறம். தமிழை லாவகமாகப் பேசக்கூடிய ஆற்றல் அவ்வளவாக இல்லை. அப்படியிருந்தும், ரஜினிகாந்த் ஒரு வைரம் என்பதை கண்டுபிடித்து, அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தினார், பாலசந்தர்.

    "ரஜினிகாந்த் கண்களில் ஒருவித பிரகாசத்தைக் கண்டேன். எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரமாக வருவார் என்று அப்போதே கணித்தேன்'' என்று கூறுகிறார், பாலசந்தர்.

    ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதோடு பாலசந்தர் நின்றுவிடவில்லை. அவரை பட்டை தீட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

    "மூன்று முடிச்சு'' படத்தில், முக்கிய வேடம் கொடுத்தார். இதில் கமலஹாசன் நடித்திருந்தாலும், அவர் ஏற்றிருந்தது "கவுரவ வேடம்'' போன்றதுதான்.

    ஸ்டைல் மன்னன் என்று பிற்காலத்தில் புகழ் பெற்ற ரஜினிகாந்த், சிகரெட்டை தூக்கிப்போடும் ஸ்டைலை முதன் முதலாகச் செய்து காட்டியது, இந்தப் படத்தில்தான்.

    இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்றிருந்த ஸ்ரீதேவி, கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.

    மூன்று முடிச்சு பெரிய வெற்றிப்படம் அல்லவென்றாலும், ரஜினிகாந்துக்கு கணிசமான ரசிகர்களைத் தேடிக்கொடுத்தது.

    பாலசந்தர் படத்தில் அறிமுகமானது பற்றி ரஜினிகாந்த் கூறியதாவது:-

    "திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற பிறகு, மீண்டும் பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை பார்த்துக்கொண்டே பொழுது போக்காகக் கன்னடப் படங்களில் நடிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.

    தமிழ்ப்படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. ஆனால் நான் எதிர்பாராதவிதமாக பாலசந்தர் சாரை சந்தித்து, அவர் மூலமாக "அபூர்வ ராகங்கள்'' படத்தில் அறிமுகமானேன்.

    அந்த `அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்பின்போதுதான், ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார், அவர். என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, அவற்றை எப்படி எல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றை எடுத்துக் கூறினார்.

    அன்று அவர் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் எனக்குப் பெரிதும் உதவின. இன்றும் உதவி வருகின்றன.''

    இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.



    சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தை முடக்கிய பிறகும் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாவதால், நடிகர், நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    சினிமா பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும், அந்தரங்க வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. ஆரம்பத்தில் தனுஷ் ஆட்கள் தன்னை தாக்கி விட்டதாக சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் ஒரு தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. ‘எனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டு விட்டது. நான் யாரையும் புண்படுத்தவில்லை. வேறு யாரோ, இதை செய்து விட்டார்கள்’ என்று சுசித்ரா கூறினார். எனது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விட்டது என்று அவரது கணவர் இன்னொரு விளக்கம் கொடுத்தார்.



    பின்னர் சுசித்ரா அவரது கணவரை விவாகரத்து செய்வதாக அதே இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டது. ‘நான் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய கருத்துக்களை வெளியிடுகிறேன்’ என்று சுசித்ரா பெயரில் கருத்து பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து முரண்பட்ட கருத்துக்கள் வெளியானதால் இந்த டுவிட்டர் பக்கத்தை தொடர்ந்தவர்களிடம் குழப்பம் நீடித்தது.

    இந்த நிலையில் சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் திரை உலகின் முக்கிய நடிகர், நடிகைகள், சின்னத்திரை கலைஞர்களின் கவர்ச்சி படங்கள் ஆபாச வீடியோக்கள் வெளியாகத் தொடங்கின. தனுஷ், திரிஷா, ஹன்சிகாவின் ஆபாச படங்கள் வெளியாகின. சஞ்சிதா ஷெட்டி, அனுயா ஆகியோரின் நிர்வாண படங்கள் மற்றும் அந்தரங்க வீடியோ காட்சிகளும் வெளிவந்தன.

    இயக்குனர் செல்வராகவன் லீலை என்ற பெயரில் செல்வராகவனும் ஆண்ட்ரியாவும் பேசும் உரையாடல் வெளியானது. மேலும், அமலாபால், பார்வதி நாயர், பிரபல நடிகர்-நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகும். சினிமா உலகின் உண்மை தோலுரித்து காட்டப்படும் என்ற வாசகமும் பதிவாகி இருக்கிறது.



    இதுதவிர விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர்-நடிகைகள் மது அருந்திவிட்டு ஆடிப்பாடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. தமன்னா, பூனம் பாஜ்வா பாடுவது போன்ற வீடியோ காட்சியும் இதில் பதிவாகி இருக்கிறது. தினமும் நள்ளிரவில் இதுபோன்ற பரபரப்பான காட்சிகள் இந்த டுவிட்டர் பக்கத்தில் வெளியாகிறது.

    ‘எனது டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கி விட்டார்கள். அவர்கள்தான் இதுபோன்ற ஆபாச படங்களையும், அந்தரங்க வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்கள்’ என்று சுசித்ரா கூறியுள்ளார். என்றாலும் இதுவரை அவர் போலீசில் புகார் செய்யவில்லை. எனவே அவர்தான் இதை செய்து வருகிறாரா? என்ற சந்தேகம் இருந்தது.



    இந்த நிலையில், தனது இணைய தளத்தை முடக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சுசித்ரா சார்பில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஏ.எம்.ரசூல்மைதீன் போலீஸ் கமி‌ஷனரிடம் பாடகி சுசித்ரா மீது புகார் செய்து இருக்கிறார்.

    இப்போது, சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தை மூடி விட்டார். என்றாலும் அவர் பெயரில் டுவிட்டர் கணக்கு புதிதாக தொடங்கப்பட்டு அவற்றில் தொடர்ந்து திரை உலகினரின் ஆபாச படங்களும், அந்தரங்க வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. இதனால் எந்த நேரத்தில் தங்கள் அந்தரங்கம் வெளிச்சத்துக்கு வருமோ என்று நடிகர்- நடிகைகள் மற்றும் திரை உலகினர் தவிப்பில் உள்ளனர்.
    பிரபல தெலுங்கு நடிகையான ராகுல் பிரீத் சிங்குக்கு தற்போது தமிழில் நடிக்க வாய்ப்புகள் அதிகமாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ராகுல் பிரீத் சிங் சில வருடங்களுக்கு முன்பு தமிழில் ‘தடையற தாக்க’ ‘புத்தகம்’ படங்களில் நடித்தார். பெரிய வாய்ப்புகள் வராததால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு பிரபல ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. தெலுங்கு படஉலகின் முன்னணி நடிகை ஆனார். இதனால் தமிழ் பட உலகில் இருந்து மீண்டும் அழைப்புக்கள் வந்தன.

    ஆனால் தெலுங்கில் பிசியாக இருந்ததால் தமிழ் படங்களை அவரால் ஏற்க முடியவில்லை. தற்போது தமிழ், தெலுங்கில் முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திலும் ராகுல் பிரீத்தி சிங்கை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.



    வேறு சில படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழ், தெலுங்கு பட உலகின் ‘பிசி’ நடிகையாக ராகுல் பிரீத் சிங் மாறி இருக்கிறார்.

    விஷாலுக்கு உடம்பு முழுவதும் விஷம் என்று தயாரிப்பாளர் தாணு ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    வருகிற ஏப்ரல் 2-ந் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் டி.சிவா, கேயார், விஷால் உள்ளிட்ட 5 அணிகள் களமிறங்குகின்றன. இந்நிலையில், நேற்று விஷால் அணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் விஷால் பேசும்போது, தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பிரச்சினைகளை பற்றியும், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளை பற்றியும் விமர்சித்து பேசினார்.

    இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் விஷாலை கைது செய்யவேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.



    அப்போது கலைப்புலி தாணு கூறும்போது, விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ன கஷ்டத்தை கொடுத்தது? தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒற்றுமை இல்லை என ஏளனம் செய்வதும், எள்ளி நகையாடுவதும் தவறு. விஷால் நடிகர் சங்கத்தை சுடுகாட்டாக மாற்றிவிட்டார். 40 வயது ஆகிவிட்ட நிலையில் விஷால் சீக்கிரமாக கல்யாணம் செய்து கொள்ளுங்கள். விஷால் என்று பெயர் வைத்துக் கொண்டு உடம்பு முழுவதும் விஷம் வைத்துள்ளார். விஷாலால் நடிகர் சங்கத்தில் நாசருக்கு அவமானம் மட்டுமே மிஞ்சும் என்றும் கூறினார்.

    பின்னர், நடிகர் பிரகாஷ்ராஜ் பற்றி கூறும்போது, ‘நீங்கள் கால்ஷீட் கொடுத்து ஒழுங்கா நடிக்க போங்க. கூட்டு குடும்பமாக நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். மொழி, இனம், மதம் வாரியாக பிரிவினையைத் தூண்டும் விதமாக உங்கள் பேச்சு அமையலாமா? நீங்கள் திருந்திக் கொள்ளவேண்டும், திருத்திக் கொள்ளுங்கள்’ என்றார்.
    ×