என் மலர்
‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால், நாயகனாக இந்தியில் களமிறங்கிய ‘கமாண்டோ’ படத்தின் இரண்டாம் பாகம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. அந்த படம் எப்படி? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் பெரும் சர்ச்சைக்கு ஆளான 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புடன் படம் தொடங்குகிறது. இந்த அறிவிப்புக்கு பின்பு, இந்தியாவில் பெரிய புள்ளிகளின் கருப்பு பணங்கள் மத்திய அரசின் சிக்குகிறது. இந்நிலையில், வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பெரிய புள்ளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட விக்கி சத்தா என்பவன் மலேசியாவில் பிடிபடுகிறான்.
அவனை இந்தியாவுக்கு கொண்டுவர இந்தியாவிலிருந்து நான்கு பேர் கொண்ட குழுவை அனுப்ப மத்திய அரசு திட்டமிடுகிறது. விக்கி சத்தா இந்தியா கொண்டுவரப்பட்டால் தான் மட்டுமில்லாது, தன்னை சார்ந்த நிறைய பேர் பிரச்சினையில் சிக்கக்கூடும் என்று நினைக்கும் மத்திய உள்துறை மந்திரியின் மகன், விக்கி சத்தாவை மலேசியாவிலேயே தீர்த்துக்கட்ட நினைக்கிறார்.

அதனால், உள்துறை மந்திரியான தனது அம்மாவிடம் விக்கி சத்தாவை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் அரசியலிலேயே பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி தனக்கு சாதகமான நான்கு பேரை, விக்கி சத்தாவை மீட்டுக் கொண்டு வருவது என்று மத்திய அரசு சார்பில் நியமிக்க வைக்கிறார். அந்த குழுவில் இன்ஸ்பெக்டரான நாயகி அடா சர்மாவும் இணைகிறார்.
இதையெல்லாம் அறிந்த, இண்டர்போல் ஆபிசரான நாயகன் வித்யூ ஜம்வால், விக்கி சத்தாவை உயிரோடு இந்தியாவுக்கு அழைத்து வரவேண்டும் என்று முடிவு செய்கிறார். அதன்படி, அந்த நான்கு பேரில் ஒருவரை சாதுர்யமாக பின்வாங்க வைத்து, அந்த குழுவில் இணைந்து மலேசியாவுக்கு புறப்படுகிறார்.
மலேசியாவுக்கு சென்ற வித்யூத் ஜம்வாலை சந்திக்கும் விக்கி சத்தாவின் மனைவியான இஷா குப்தா, தாங்கள் நிரபராதி என்றும், தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க உதவுவதாக வாக்குறுதி அளித்தால், உண்மையான குற்றவாளியை கண்டுபிக்க தான் உதவுவதாக அவள் கூறுகிறாள். இதனை நம்பும் வித்யூத் ஜம்வால் அவளுடன் செல்கிறார்.

இறுதியில் வித்யூத் ஜம்வால், விக்கி சத்தாவை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று தன்னுடன் வந்திருக்கும் மூன்று பேரையும் மீறி விக்கி சத்தாவை இந்தியா கொண்டு வந்தாரா? விக்கி சத்தா உண்மையான குற்றவாளி இல்லையென்றால், உண்மையான குற்றவாளி யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு பிற்பாதியில் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
படத்திற்கு பெரிய பலமே வித்யூத் ஜம்வாலின் ஆக்ஷன்தான். நடிப்பு பெரியதாக எதிர்பார்க்கமுடியாவிட்டாலும் ஹாலிவுட் ஸ்டார்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். இவர் செய்யும் சில ஆக்ஷன் காட்சிகளில் எல்லாம் நம்மை படபடக்க வைக்கிறார். ரொமான்ஸ் காட்சியிலும் கொஞ்சம் ரசிக்க வைக்கிறார்.

இன்ஸ்பெக்டராக வரும் அடால் சர்மா ரசிக்க வைக்கிறார். இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இந்தியில் வெளிவந்த ‘கமாண்டோ’ படமே தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்திருப்பதால், இந்தி நட்சத்திரங்களே பெரும்பாலும் நடித்திருக்கிறார்கள். வித்யூத் ஜம்வால் மட்டும் தமிழில் ’துப்பாக்கி’ படத்தில் நடித்திருப்பதால், அவர் மட்டுமே நமக்கு அறிமுகமாக தெரிகிறார். அதனால், மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் பெரும்பாலும் அறிமுகம் இல்லாவிட்டாலும், அவர்கள் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
கறுப்பு பணத்தை மையமாக வைத்து அறிமுக இயக்குனர் தேவன் போஜனி இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் தலைப்புப் போலவே ஆக்ஷனை மையமாக வைத்து இப்படத்தை கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் பிரியர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும். அதேபோல், மலேசியாவில் உண்மையான குற்றவாளியை பிடிக்க வித்யூத் ஜம்வால் வகுக்கும் வியூகங்கள் எல்லாம் வியக்க வைக்கிறது.
சிரந்தன் தாஸின் ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளில் பலே சொல்ல வைத்திருக்கிறது. பிரசாத் சாஸ்தேவின் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. மன்னன் ஷாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான்.
மொத்தத்தில் ‘கமாண்டோ’ ஆக்ஷன் பிரியர்களுக்கு மட்டும்.

தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக டுவிட்டரில் தொடர்ந்து பதிவுகளை டுவிட் செய்து வருகிறார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களையும் தனது பாணியில் டுவிட் செய்து, சில பேரின் எதிர்ப்பையும், பலரின் பாராட்டுதல்களையும் பெற்றார்.
இடையில், இவரது நற்பணி மன்றத்தை சேர்ந்த சிலபேரை போலீசார் திடீரென கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு கமல் தனது டுவிட்டர் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பின்னர், தனது நற்பணி மன்றத்தை சேர்ந்த யாரும், யாரையும் தகாத சொற்களால் வசை பாடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், கமல்ஹாசன் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் இன்று காலை சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் எதற்காக? என்பது இதுவரை தெரியவில்லை. கூட்டம் முடிவுக்கு பின்னர், இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் காங்கிரஸ் விழாவில் கே.ஆர்.விஜயா, மீனா, ஜெயசித்ராவுக்கு இந்திரா விருது வழங்க முடிவு செய்துள்ளனர்.
சென்னை:
தமிழக மகளிர் காங்கிரசில் மாநில தலைவர் ஜான்சி ராணி தலைமையில் ஒரு கோஷ்டியும், மூத்த தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்படுகிறது.
ஜான்சிராணி ஆதரவாளர்கள் வருகிற 13-ந்தேதி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் மகளிர் தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ராணி ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார்.
இந்த விழாவில் பங்கேற்கும்படி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் பொது செயலாளர் நக்மா, மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷோபா ஓஜா ஆகியோருக்கு ஜான்சி ராணி அழைப்பு விடுத்துள்ளார்.
யசோதா ஆதரவாளர்கள் 19-ந்தேதி கடலூரில் மகளிர் தின விழா நடத்துகிறார்கள். இதில் பங்கேற்க புதுவை முதல்வர் நாராயணசாமி, முகுல்வாஸ்னிக், ஷோபா ஓஜா, நக்மா, திருநாவுக்கரசர் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயசித்ரா
யசோதா தலைமையில் நடைபெறும் விழாவில் நடிகைகள் கே.ஆர். விஜயா, ஜெயசித்ரா, மீனா ஆகியோருக்கு இந்திரா விருது வழங்க முடிவு செய்துள்ளனர்.
ஆனால் டெல்லி மேலிடம் நடிகைகளுக்கு இந்திரா விருது வழங்குவதை விரும்பவில்லை.
அதேபோல் மீனாவும், நக்மாவும் சமகால நடிகைகள். இதில் மீனாவுக்கு மட்டும் விருது வழங்கப்படுவதை நக்மா விரும்பவில்லை. எனவே யசோதா நடத்தும் நிகழ்ச்சியில் நக்மாவும், ஷோபா ஓஜாவும் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஜான்சிராணி கூறும் போது, இந்த இரு நிகழ்ச்சிகளும் மகளிர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் அல்ல. சுய உதவி குழுக்கள் நடத்தும் நிகழ்ச்சிகள். மகளிர் காங்கிரஸ் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

பின்னணி பாடகி ஒருவர் வெளியிட்ட புகைப்படங்கள் வெளியானதற்கு பின்னால் ஒரு மூன்றெழுத்து நடிகர் ஒருவர் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது உண்மையா? என்பதை கீழே பார்ப்போம்.
கடந்த சில தினங்களாக கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது பின்னணி பாடகி வெளியிட்ட புகைப்படங்கள். இந்த புகைப்படங்களை வெளியிட்டது தான் இல்லை என்று பாடகி மறுப்பு தெரிவித்தாலும், அவருக்கு பின்னால் ஒரு மூன்றெழுத்து நடிகர் ஒருவர் அவரை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
அவர் வேறு யாருமல்ல, வம்பு நடிகர்தானாம். வாரத்தின் இறுதி நாட்களில் கொலவெறி நடிகர் தனக்கு நெருக்கமான நடிகர், நடிகைகளுடன் ஓட்டல் அல்லது ரிசார்ட்டுகளில் பார்ட்டி கொண்டாடுவாராம். அப்படி பார்ட்டி கொண்டாடும்போது எடுக்கப்படும் புகைப்படங்களை அடுத்தநாளே அந்த நடிகர், நடிகைகளுக்குள் பரிமாறிக் கொள்வார்களாம்.

அப்படி பரிமாறிக்கொண்ட ஒரு நடிகரின் செல்போன்தான் தற்போது அந்த பாடகியிடம் வசமாக சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது நண்பரான வம்பு நடிகரிடம் சொல்லப்போக, அவரும் இதுதான் பழிவாங்க சரியான தருணம் என்று புகைப்படங்களை வெளியிட பாடகிக்கு ஐடியா கொடுத்ததாக கூறப்படுகிறது. பாடகிக்கு பின்னால் அந்த மூன்றெழுத்து நடிகர்தான் இருந்து அவரை இயக்குவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சஞ்சிதா ஷெட்டி பெயரில் உலவும் நிர்வாண போட்டோ தன்னுடையதல்ல என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான வீடியோக்களும், போட்டோக்களும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல், அந்த டுவிட்டர் கணக்கில் இன்னும் பல பிரபலங்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், இது எல்லாவற்றயும் தான் செய்யவில்லை என்று சுசித்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் கணக்கை யாரோ ஒருவர் முடக்கிவிட்டதாகவும், தான் எந்த கருத்தும் பதிவு செய்யவில்லை என்று கூறியிருந்தார். இருப்பினும், அவரது பெயரில் வெளியிடப்பட்ட போட்டோக்களில் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் நிர்வாண புகைப்படமும் இடம்பிடித்திருந்தது.

இதுகுறித்து, சஞ்சிதா ஷெட்டி அளித்துள்ள விளக்கத்தில், சமூக வலைத்தளத்தில் நேற்று முதல் நடப்பவற்றையெல்லாம் நான் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறேன். என் பெயரில் உலவும் நிர்வாண போட்டோ என்னுடையதல்ல என்று கூறியுள்ளார். சஞ்சிதா ஷெட்டி தமிழில், ‘வில்லா’, ‘சூது கவ்வும்’, ‘என்னோடு விளையாடு’, ‘ரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக மகளிர் தினத்தையொட்டி ஐ.நா சபையில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் நடிகர் ரஜினி காந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆட இருக்கிறார்.
வாஷிங்டன்:
மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில், இந்திய கலாச்சாரத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ஐஸ்வர்யா தனுஷ் நம் நாட்டின் நடன கலைகளுள் ஒன்றான பரத நாட்டியத்தை ஐ.நா.வில் அரங்கேற்ற இருக்கிறார்.

இந்நடன விழா ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதகரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இந்தியாவிலிருந்து முதன்முறையாக நடனமாட அழைக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இந்தியாவின் சார்பில் எம்.எஸ்.சுப்புலெட்சுமி ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக பாடியுள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், மகளிர் தினத்தையொட்டி பல்வேறு நாடுகளின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேற இருக்கின்றது. இந்நிகழ்சியில், இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஐ.நா.வுக்கான இந்தியப் பிரதிநிதி ஆகியோரும் பங்கேற்க இருக்கின்றனர்.

புரட்சிகரமான கதையைக் கொண்ட "அரங்கேற்றம்'' படத்தின் மூலம், பாலசந்தர் பெரும் பரபரப்பை உண்டாக்கினார்.

1972-ல் "வெள்ளி விழா'' படம் வாகினி ஸ்டூடியோவில் படமாகிக் கொண்டிருந்த சமயத்தில், பாலசந்தருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு காரில் புறப்பட்டார்.
அதன்பின் நடந்தது பற்றி பாலசந்தர் கூறுகிறார்:-
"ஜெமினி அருகே கார் நின்றது. தனிமையில் இருந்த நான், என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தேன். அப்போது, "கண்ணா நலமா'' பேனர் கண்ணில் பட்டது. `இத்தனை ஆண்டுகள் கலைத்துறையில் இருந்து என்ன சாதித்து விட்டோம்' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இதற்குக் கிடைத்த பதில் `ஒன்றுமில்லை' என்பதுதான். `இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை. ஏதும் சாதிக்காமலேயே போய்விடுவோமா?' என்று எண்ணியபோது, கண்களில் நீர்த்துளிகள் மல்கின.
கார் நகரத் தொடங்கியது. என் சிந்தனைகளும் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. அப்போது, கதீட்ரல் ரோட்டில் என் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் இருந்த "புன்னகை'' பேனர்களைப் பார்த்தேன். சிறிது ஆறுதல். `ஏதும் செய்யாமல் இல்லை. ஏதோ நம்மால் முடிந்ததைச் செய்துதான் இருக்கிறோம்' என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். என் மனச்சுமை சிறிது இறங்கியது போல் இருந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய எனக்கு புதிய வேகமும், தெம்பும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டன. `எதையாவது புதுமையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் சினிமா துறையில் நான் நின்றாலும் சரி, வீழ்ந்தாலும் சரி' என்று முடிவு எடுத்தேன்.
"வெள்ளி விழா'' படத்தை முடித்து திரையிட்டவுடன், அரங்கேற்றம் படத்தை எடுத்தேன்.''
இவ்வாறு பாலசந்தர் கூறினார்.
பாலசந்தரின் திரை உலக வாழ்க்கையில், "தெய்வத்தாய்'' முதல் "வெள்ளி விழா'' வரை முதல் பாகம். இரண்டாம் பாகம் "அரங்கேற்ற''த்தில் தொடங்குகிறது.
இதை இரண்டாம் பாகம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. "ஒரு நல்ல படத்தைத் தயாரிக்க வேண்டும்'' என்பதே, இதற்குமுன் பாலசந்தரின் நோக்கமாக இருந்தது. ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றபோது, தான் அதுவரை நடந்து வந்த பாதையையும், தன் படைப்புகள் பற்றியும் சிந்தித்துப் பார்க்க அவகாசம் கிடைத்தது.
"இனி நல்ல படங்களை எடுத்தால் மட்டும் போதாது. சமுதாயத்துக்கு உதவக்கூடிய கருத்துக்களை எடுத்துக் கூறும் படங்களை தயாரிக்க வேண்டும். பிறர் தொடத்தயங்கும் கதைகளை துணிந்து படமாக்க வேண்டும்'' என்று முடிவு எடுத்தார். அதன் தொடக்கமே "அரங்கேற்றம்.''
வறுமையினாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினாலும் வழி தவறிச் செல்லும் ஒரு பெண்ணைச் சுற்றிச் சுழலும் கதை. வழுக்கி விழுந்த பெண்ணாக பிரமிளா நடித்தார். அவருக்கு வாழ்வு கொடுக்க முன்வரும் இளைஞனாக சிவகுமார் நடித்தார்.
"களத்தூர் கண்ணம்மா''வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், வாலிபனாக இப்படத்தில் முதன் முதலாகத் தோன்றினார். "கலாகேந்திரா'' தயாரிப்பான `அரங்கேற்றம்' 1973-ல் வெளிவந்தது.
இந்தப்படம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. கதையை சில பத்திரிகைகள் பாராட்டின; சில பத்திரிகைகள் தாக்கின. படம் பார்த்த பலர் படத்தை ஓகோ என்று புகழ்ந்தனர்; சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
கதாநாயகி ஒரு பிராமணப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்ததால், பிராமணர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-
"சூழ்நிலை காரணமான தவறான பாதைக்குப் போனவர்கள் எந்த ஜாதியிலும் இல்லாமல் இல்லை.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை, வறுமையின் எல்லையை படம் பிடித்துக்காட்ட விரும்பினேன். அதற்கு வைதீக பிராமணக் குடும்பம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதை கருவாகக் கொண்டு, கற்பனையில் கதையை உருவாக்கினேன்.
திரைப்படத்துறை ஒரு தொழில்தான். மறுக்கவில்லை. ஆனால் அது கலப்படம் இல்லாமல் இருக்கவேண்டும்.
ஏதேனும் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் அமையும்போதுதான், திரைப்படத் தொழில் சமுதாயத்திற்கு தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்ததாக கருதமுடியும்.
ஏற்கனவே சில திரைப்படங்களில் ஆங்காங்கே `குடும்பக் கட்டுப்பாடு' மென்மையாக வலியுறுத்தப்பட்டு இருந்தது. என்றாலும், முழுத் திரைக்கதை அமைப்பிலும் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், `இல்லை' என்ற பதில்தான் என் நினைவுக்கு எட்டியவரை தோன்றியது.
எனவே, அரங்கேற்றத்தின் மூலக் கருத்தாக அதை வைத்தேன்.
எந்த ஒரு விஷயத்தை மேலெழுந்த வாரியாகவும் சொல்ல முடியும். ஆனால் அரங்கேற்றம் கதையைப் பொறுத்தவரை மேலெழுந்த வாரியாகச் சொல்ல நான் விரும்பவில்லை.
கற்பனையை விட உண்மை சில நேரங்களில் விசித்திரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஏன், பயங்கரமான உண்மைகளும் உண்டு. சில உண்மைகளைச் சொல்வதற்கு நாம் அஞ்சுகிறோம். ஆனால் அரங்கேற்றத்தில் அதைச் சொல்ல நான் அஞ்சவில்லை.''
இவ்வாறு பாலசந்தர் கூறியுள்ளார்.
"அரங்கேற்றம்'' படத்தின் கதை பற்றி வாதப் பிரதிவாதங்களும், பட்டிமன்றங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், படம் மக்கள் ஆதரவுடன் வெற்றிநடைபோட்டது.
தமிழ்த்திரை உலக வரலாற்றில் "அரங்கேற்றம்'' ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.

மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ராதாரவி வீட்டை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் ராதாரவி வீட்டை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை, நடிகரும் பேச்சாளருமான ராதாரவி, மாற்றுத்திறனாளி குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

அதிமுக-வுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராதாரவி, வைகோவையும், ராமதாஸையும் சாடிய போது, மாற்றுத்திறனாளிகளோடு ஒப்பிட்டுப் பேசினார். அவரது பேச்சுக்கு மேடையில் இருந்த அனைவரும் சிரித்தாலும், அவரின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்த பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது வீட்டை முற்றுகையிட்டு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தையாக இருந்த போது தான் கற்பழிக்கப்பட்டதாக 79 வயது ஆலிவுட் நடிகை ‘செக்ஸ்’ புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
குழந்தையாக இருந்த போது கற்பழிக்கப்பட்டதாக 79 வயது ஆலிவுட் நடிகை ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளார்.
பிரபல முன்னாள் ஆலிவுட் நடிகை ஜானே பான்டா. தற்போது இவருக்கு 79 வயது ஆகிறது. இவர் ஆஸ்கர் விருது வென்றுள்ளார். சமீபத்தில் இவரை பிரி லார்சன் என்ற நடிகை ஒரு இணையதள செய்தி நிறுவனத்துக்காக பேட்டி கண்டார்.

அப்போது அவர் தனது கடந்த கால சம்பவங்களை நினைவு கூர்ந்தார். தான் நடிகையாக இருந்த போது சந்தித்த பிரபலங்கள், ‘செக்ஸ்’ தொந்தரவுகள் குறித்து மனம் திறந்து கருத்துக்களை தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில் தான் குழந்தையாக இருந்த போது ‘செக்ஸ்’ தொந்தரவில் சிக்கியதாக கூறினார். மேலும் தான் கற்பழிக்கப் பட்டதாகவும் பகிரங்கமாக தனது மன வேதனையை வெளிப்படுத்தினார்.
அது தனது மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியதாகவும், பல இரவுகள் தூக்கமின்றி தவித்ததாகவும் அவர் கூறினார்.

டுவிட்டரில் ஆபாச படம், செய்திகளை வெளியிட்ட பாடகி சுசித்ராவுக்கு மனநிலை பாதித்து விட்டதாக அவரது கணவர் கார்த்திக் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரபல சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷ் ஆட்கள் தன்னை காயப்படுத்தி விட்டதாக கூறி இருந்தார். படமும் வெளியானது.
பின்னர் அந்த தகவலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சுசித்ரா கூறி இருந்தார். இதுபற்றி சுசித்ராவின் கணவர் கார்த்திக் வெளியிட்ட தகவலில், ‘சுசித்ராவின் டுவிட்டர் யாரோ சிலரால் முடக் கப்பட்டு விட்டது. அதில் வெளியான படத்துக்கும், செய்திக்கும் எனது மனை விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தப் பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறி இருந்தார்.

தொடர்ந்து டுவிட்டரில் வெளியான செய்தியில் சுசித்ரா அவரது கணவர் கார்த்திக்கை டைவர்ஸ் செய்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. பின்னர் அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. முடக்கப்பட்ட டுவிட்டர் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சுசித்ராவின் டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா, டி.வி. தொகுப்பாளர் டி.டி. ஆகியோரின் அந்தரங்க படங்கள் வெளியானது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி விளக்கம் அளித்த சுசித்ரா, “மர்ம நபர்களால் எனது டுவிட்டர் வலைத்தளம் முடக்கப்பட்டு இருக்கிறது. யாருடைய புகைப்படமும் என்னிடம் இல்லை. நான் யாரையும் இழிவுபடுத்தும் ஆள் இல்லை. முன்பும் ஒருமுறை என் டுவிட்டர் முடக்கப்பட்டது. என்னை தொடர் பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் பாடகி சுசித்ராவின் கணவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், “சுசித்ரா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது மனநிலை மாறியதால்தான் இதுபோல் நடந்து விட்டது. நாங்கள் அவரை கண்காணித்து வருகிறோம்.

பாதிக்கப்பட்ட அனைவரையும் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன். எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். கார்த்திக்கின் இந்த விளக்கத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒரு இசை அமைப்பாளருடன் விருந்தில் கலந்து கொண்டபோது தான் குடித்த பானத்தில் மருந்து கலக்கப்பட்டு இருந்தது. பிறகு நடந்த அந்த பயங்கர அனுபவத்தை இங்கு கூற முடியாது என்றும் சுசித்ரா பெயரில் தகவல் பதிவாகி இருக்கிறது.
இதன்பிறகு சுசித்ரா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது. யாரோ தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இன்று காலை தான் இந்த தகவல் எனக்கு தெரியும். எனக்கும், என்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் தகவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

எக்ஸ் மேன் வரிசையில் வோல்வோரின் கதையின் கடைசி பாகமாக வெளியாகியுள்ள `லோகன்' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
படத்தின் நாயகர்களான வோல்வோரின், பேராசிரியர் எக்ஸ் மற்றும் கேலிபர் ஆகிய 3 பேரும் மெக்சிகோ நகருக்கு வெளியே ஒளிவுமறைவாக வாழ்ந்து வருகின்றனர். வோல்வோரின் பிறந்து கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கும் மேல் ஆகிறது என்பது நாம் அறிந்ததே. அவரது உடல்நிலை முன்பு போல சரிவர ஒத்துழைப்பதில்லை. அவரது சக்திகளும் வரவர குறைந்து வருகிறது. ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், அதிலிருந்து மீள முடியாமல் அவை தழும்புகளாக மாறி விடுகிறது.
இது ஒருபுறம் இருக்க பேராசிரியர் எக்ஸ்-ம் ஒரு வித மூளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த பாதிப்பின் காரணமாக சுமார் 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்-மேன்களையும் கொன்று குவித்துள்ளார். பேராசிரியர் எக்ஸின் அறிவுரைப்படியே வோல்வோரின் ஒவ்வொரு வேலையையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், ட்ரான்ஸ்ஜென்ஸ் என்னும் இடத்தில் இருந்து தப்பி வரும் பெண் ஒருவர், வோல்வோரினை மறைமுகமாக சந்தித்து லாரா என்னும் பெண்ணை பார்த்துக் கொள்ளும்படி கேட்கிறார். மேலும் லாராவை கனடாவில் உள்ள ஒரு இடத்தில் பத்திரமாக கொண்டு சேர்க்கும்படியும் கேட்கிறாள். முதலில் அந்த பெண்ணின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் வோல்வோரின் பணம் பெற்றுக்கொண்டு ஒருவழியாக ஒத்துக் கொள்கிறார்.
அதே நேரத்தில் லாராவை கொல்ல ஒரு கும்பல் தேடி வருகிறது. அந்த நேரத்தில் லாரா தனது மகள் என்னும் உண்மையை அறியும் வோல்வோரின், லாராவை அந்த கும்பலிடமிருந்து எப்படி காப்பாற்றினார்? என்னென்ன இன்னல்களை சந்தித்தார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதிக்கதை.

வோல்வோரின்னாக வரும் ஹீ ஜேக்மேன் அவரது இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். படம் முழுவதும் வயதான தோற்றத்தில் வரும் வோல்வோரின் சண்டைக்காட்சிகளில் எப்போதும் போல அசத்தியுள்ளார். எக்ஸ் மேன் படங்களிலேயே வோல்வோரின் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படமாக அமைந்ததற்கு ஹீ ஜேக்மேனும் ஒரு முக்கிய காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதே போல் பேட்ரிக் ஸ்டீவர்ட்(போராசிரியர் எக்ஸ்), ரிச்சர்ட், பாய்ட், ஸ்டீபன் மெர்சண்ட், டஃப்னே கீன் உள்ளிட்ட அனைவரது நடிப்பும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் டஃப்னே கீனின் நடிப்பு மிகவும் ஆக்ரோஷமாக உள்ளது படத்திற்கு ப்ளஸ்.

எக்ஸ் மேன் வரிசையில் 17 வருடங்களாக படங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், வோல்வோரினுக்காக 3 பாகங்கள் உருவாகியுள்ளன. அதில் லோகன் படமே 3வது மற்றும் கடைசி பாகமாகும். எக்ஸ் மென் வரிசையிலேயே வோல்வோரின் பாகமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முன்னதாக கடந்த 2009-ஆம் ஆண்டு எக்ஸ் மேன் வோல்வோரின் என்ற முதல் பாகமும், 2013-ஆம் ஆண்டு தி வோல்வோரின் என்ற இரண்டாவது பாகமும் வெளியான நிலையில், வோல்வோரின் கதையின் கடைசி பாகமாக லோகன் படத்தை இயக்குநர் ஜேம்ஸ் மேன்கோல்டு இயக்கியுள்ளார்.
வோல்வோரின் படத்தின் 2வது பாகத்தையும் இவரே இயக்கியிருந்தார். வோல்வோரின் படத்திலேயே லோகன் பாகமே சிறந்த அதிரடி படமாக உருவாகியுள்ளது படத்தின் சிறப்பு. முழுக்க முழுக்க அதிரடி படமாக உருவாகியுள்ள லோகன், டார்க் நைட் படத்திற்கு பிறகு அதிகமாக பேசப்படும் படமாக உருவாகியுள்ளது. குறிப்பாக படத்தில் வோல்வோரின் வாராவை தனது மகள் என மறுக்கும் காட்சிகளும், லாராவுக்கு ஆபத்து வந்தால் அதில் வோல்வோரினுக்கு ஏற்படும் கோபத்தையும் இயக்குநர் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.

படத்தின் சண்டைக்காட்சிகள் மலைப்பாகவும், விரும்பிப் பார்க்கும்படியும் உள்ளது. குறிப்பாக வோல்வோரின், டஃப்னே கீன் சண்டைக்காட்சிகளில் படத்தின் சண்டை இயக்குநர் சிறப்பாக பணியாற்றியுள்ளதை படத்தில் காண முடிகிறது. ஜான் மேத்திசனின் ஒளிப்பதிவும், வி.எஃப்.எக்ஸ். காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளது.
மொத்தத்தில் லோகன் வன்முறை விருந்து.

சுருதிஹாசனின் காதலர் என்ற சொல்லப்பட்ட லண்டனைச் சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்செல்லை சுருதியின் தந்தையும் நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார். அவர் சுருதியின் திருமணம் குறித்து பேசினாரா என்பதை கீழே பார்ப்போம்.
சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்செல் மும்பை வந்தார். அவரை சுருதிஹாசன் விமான நிலையத்தில் வரவேற்று அழைத்து வந்தார். இருவரும் ஜோடியாக நின்ற படங்கள் இணைய தளங்களில் வெளியாகின.
இருவரும் காதலர்கள் என்றும் ‘கிசுகிசு’ கிளம்பியது. காதலர் தினத்தை கொண்டாடுவதற்காகத்தான் கார்செல் மும்பை வந்தார் என்றும் தகவல் வெளியாகின.

ஆனால் சுருதிஹாசன் இதை கண்டு கொள்ளவில்லை. விரைவில் லண்டனில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில் சுருதிஹாசன் பங்கேற்கிறார். அது பற்றிய ஏற்பாடுகள் செய்வதற்காக சுருதிஹாசனுடன் ஆலோசிப்பதற்காக அவர் மும்பை வந்தார் என்றும் சொல்லப்பட்டது.
இதுபற்றி கூறிய சுருதிஹாசன், “மற்றவர்கள் கணிப்புகள் குறித்து கவலை இல்லை. நான் அதுபற்றி எதுவும் கருத்து தெரிவிக்க மாட்டேன். இதுவரை யாரையும் காதலிக்கவில்லை” என்று கூறி இருந்தார்.

தற்போது, கமல்ஹாசன் இந்தியா - பிரிட்டன் கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ளார். அவரை சுருதிஹாசனின் நண்பர் மைக்கேல் கார்செல் சந்தித்துள்ளார். கமலுடன் அவர் நிற்கும் படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் மகள் திருமணம் பற்றி லண்டன் நடிகர் மைக்கேல் கார்செல்லுடன் பேசுவதற்காக அவரை கமல் சந்தித்து இருப்பாரோ என்று இணைய தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.