உலகம்
ரஷிய அதிபர் புதின்

வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகளை தேசியமயமாக்குவோம்- உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ள ரஷியா

Published On 2022-03-10 13:56 IST   |   Update On 2022-03-10 13:56:00 IST
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 2 வாரத்திற்கும் மேலாக போர் செய்து வருகிறது. ரஷியாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக ரஷியாவில் இயங்கி வரும் வெளிநாடுகளை சேர்ந்த  டொயோட்டா, ஃபோக்ஸ்வாகன், ஜாகுவார், லேண்ட் ரோவர், மெர்செடிஸ் பென்ஸ், ஃபோர்ட், பி.எம்.டபில்யூ ஆகிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகன உற்பத்தியையும், ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்துள்ளன. 

இதையடுத்து வெளிநாட்டு அந்நிறுவனங்கள் தங்களது வாகன தயாரிப்பை மீண்டும் தொடங்காவிட்டால், அவர்களது அனைத்து தொழிற்சாலைகளும் தேசியமயமாக்கப்படும் என ரஷியா பகிரங்கமாக மிரட்டியுள்ளது.



இதையடுத்து ஹுண்டாய் நிறுவனம், போரின் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாகவும், விரைவில் மீண்டும் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.

ரெனால்ட், அவ்டோவாஸ் போன்ற நிறுவனங்களும் உற்பத்தியை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளன.

ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் ரஷியா மற்றும் உக்ரைனிலேயே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் ரஷியாவின் இந்த மிரட்டல் உலக நாடுகளை அச்சம்கொள்ள செய்துள்ளது.

Similar News