ஆட்டோமொபைல்
ஆடி ஆர்எஸ் 7 ஸ்போர்ட்பேக்

2020 ஆண்டு அறிமுகமானதில் டாப் 5 சிறந்த கார்கள்

Published On 2020-12-30 16:38 IST   |   Update On 2020-12-30 16:38:00 IST
இந்திய சந்தையில் இந்த ஆண்டு அறிமுகமானதில் டாப் 5 சிறந்த கார்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2020 ஆண்டு சிறப்பான ஒன்றாக அமைந்து இருக்கிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் துவங்கி, பிஎஸ்6 விதிகள் அமலானது, கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் என பல்வேறு ஏற்ற தாழ்வுகள் நிறைந்து இருந்தது.

இவற்றுக்கும் மத்தியில் பல்வேறு கார் மாடல்கள் புதிதாகவும், பழைய மாடல்களின் பேஸ்லிப்ட் வேரியண்ட்கள் என ஏராளமான கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வரிசையில், 2020 ஆண்டு அறிமுகமான கார்களின் பத்து சிறந்த மாடல்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.



ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஐ20 கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6.79 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.23 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

மஹிந்திரா தார்

இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் மாடல் இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பாதுகாப்பு சோதனையில் நான்கு நட்சத்திர புள்ளிகளை பெற்று இருக்கிறது. மேலும் இது மிக குறுகிய காலக்கட்டத்தில் 20 ஆயிரம் முன்பதிவுகளை கடந்துள்ளது.

கியா சொனெட் 

இந்திய சந்தையில் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட கியா சொனெட் மாடல் விலை ரூ. 6.71 லட்சத்தில் துவங்குகிறது. இந்த மாடல் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இது ஆறு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.



நிசான் மேக்னைட்

ரூ. 4.99 லட்சம் என துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த மாடல் முன்பதிவு துவங்கிய ஒரே மாதத்தில் 15 ஆயிரம் முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. 

எம்ஜி குளோஸ்டர்

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பெரிய எஸ்யுவி மாடலாக எம்ஜி குளோஸ்டர் மாடலாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்து இருக்கிறது.



இவை தவிர இந்த ஆண்டு ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி, டாடா அல்ட்ரோஸ், இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா, டாடா நெக்சான் இவி, எம்ஜி இசட்எஸ் இவி, மெர்சிடிஸ் பென்ஸ் இகியூசி, டொயோட்டா அர்பன் குரூயிசர், கியா கார்னிவல், ஸ்கோடா கரோக், ஃபோக்ஸ்வேகன் டி ராக், லேண்ட் ரோவர் டிபென்டர் போன்ற மாடல்கள் அறிமுகமாகின.

இத்துடன் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப், பிஎம்டபிள்யூ எம்8, 8 சீரிஸ் கிரான் கூப், ஆடி ஏ8எல், ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், ஆடி ஆர்எஸ் கியூ8, மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப் என ஆடம்பர நிறுவனங்களின் கார் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

Similar News