இது புதுசு

அடுத்தடுத்து புது மாடல்கள் - 2022 வெர்சிஸ் 650 டீசர் வெளியிட்ட கவாசகி

Update: 2022-06-27 08:03 GMT
  • கவாசகி நிறுவனம் விரைவில் புதிய வெர்சிஸ் 650 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இந்த மாடல் ஏற்கனவே இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வந்தது.

கவாசகி நிறுவனம் சில தினங்களுக்கு முன் தான் கவாசகி நின்ஜா 400 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நிலையில், மற்றொரு புது மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் கவாசகி நிறுவனம் துவங்கி விட்டது. இம்முறை கவாசகி நிறுவனம் சற்றே பெரிய வெர்சிஸ் 650 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் ஸ்பை படங்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், புதிய கவாசகி வெர்சிஸ் 650 மாடல் ஜூலை மாத வாக்கில் விற்பனையகங்களை வந்தடையும் என கூறப்படுகிறது. மேம்பட்ட கவாசகி வெர்சிஸ் 650 மாடலில் புதிய ஃபேரிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தோற்றத்தில் கவாசகி வெர்சிஸ் 1000 போன்றே காட்சியளிக்கிறது.


இத்துடன் ரிவைஸ்டு ஹெட்லைட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிளை-ஸ்கிரீன், கூர்மையாக காட்சியளிக்கும் என்ஜின் கவர் உள்ளது. இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் 649சிசி, லிக்விட் கூல்டு, ட்வின் சிலிடண்ர் என்ஜின் வழஙகப்படும் என தெரிகிறது.

இந்த என்ஜின் 66 பி.எஸ். பவர், 61 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் கவாசகி டிராக்‌ஷன் கண்ட்ரோல், டூ-லெவல் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதனை முழுமையாக ஸ்விட்ச் ஆப் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

புதிய வெர்சிஸ் 650 மாடலில் டி.எப்.டி. டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடல் தொடர்ந்து CKD முறையிலேயே இந்தியா கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. புதிய கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் விலை முந்தைய மாடலை விட ரூ. 50 ஆயிரத்தில் துவங்கி ரூ. 70 ஆயிரம் வரை அதிகரிக்கப்படலாம். தற்போதைய கவாசகி வெர்சிஸ் 650 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 15 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News