இது புதுசு

இந்தோனேசியாவில் அறிமுகமான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

Published On 2022-11-21 15:57 GMT   |   Update On 2022-11-21 15:57 GMT
  • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் சர்வதேச சந்தையில் அறிமுகமானது.
  • புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் சில நாட்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இன்னோவா ஜெனிக்ஸ் பெயரில் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் புதிய இன்னோவா சர்வதேச வெளியீடு ஆகும். இதே கார் இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எம்பிவி மாடல் டொயோட்டா நிறுவனத்தின் மாட்யுலர் TNGA-C: GA-C பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இது தற்போது விற்பனை செய்யப்படும் இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட வித்தியாசமாக இருக்கும். மேலும் இதன் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் என முழு அம்சங்களும் அடியோடு வேறுபடுகிறது. தற்போதைய இன்னோவா க்ரிஸ்டா மாடலில் ரியர் வீல் டிரைவ், லேடர் ஆன் ஃபிரேம் உற்பத்திக்கு மாற்றாக புதிய இன்னோவா மோனோக் சேசிஸ் மற்றும் முன்புற வீல் டிரைவ் செட்டப் கொண்டிருக்கிறது.

தோற்றத்தில் புது இன்னோவா மாடல் எஸ்யுவி போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் ஹெக்சகோனல் வடிவம் கொண்ட கிரில், க்ரோம் பார்டர்கள், மெல்லிய ஹெட்லைட்கள், பெரிய வெண்ட்கள் கொண்ட மஸ்குலர் முன்புற பம்ப்பர், மெல்லிய எல்இடி டிஆர்எல் பார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பக்கவாட்டுகளில் ஃபிலார்டு வீல் ஆர்ச்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், அண்டர் பாடி கிலாடிங், மஸ்குலர் கேரக்டர் லைன்கள் உள்ளன.

இந்த கார் டூயல் டோன் ORVMகள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி இண்டிகேட்டர்கள், பிளாக்டு-அவுட் எலிமண்ட்களை கொண்டிருக்கிறது. பின்புறத்தில் மெல்லிய ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், மெல்லிய ஆர்ச்டு ரியர் விண்ட்-ஷீல்டு மற்றும் வைப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் இன்னோவா க்ரிஸ்டாவை விட 20மில்லிமீட்டர் நீளமாக உள்ளது. இது 475 மில்லிமீட்டர் அகலம், உயரம் 1795 மில்லிமீட்டர், வீல்பேஸ் 100 மில்லிமீட்டர் உயரமாக்கப்பட்டு இருக்கிறது.

உள்புறம் புதிய, அதிக நவீனமான லே-அவுட், ஆல் பிளாக் அல்லது பிளாக் மற்றும் பிரவுன் என டூயல் டோன் இண்டீரியர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டேஷ்போர்டில் 10 இன்ச் அளவில் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, மல்டி-ஃபன்ஷனல் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இந்த காரில் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹில்-ஹோல்டு பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் இரண்டாம் அடுக்கில் கேப்டன் சீட்கள், பானரோமிக் சன்ரூஃப், ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஏசி வெண்ட்கள், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியண்ட் லைட்டிங் வசதிகளை கொண்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல்களில் 10 இன்ச் அளவில் இரண்டாவது ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் டொயோட்டா சேஃப்டி சென்ஸ் 3.0 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.

இதில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ஏழு ஏர்பேக், 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள், ABS, EBD, ரியர் பார்க்கிங் கேமரா என ஏராளமான அம்சங்கள் உள்ளன. காரின் அனைத்து வேரியண்ட்களின் நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக் ஸ்டாண்டர்டு அம்சமாக உள்ளது. இத்துடன் எலெக்ட்ரிக் டெயில்கேட் மற்றும் வாய்ஸ் கமாண்ட் மூலம் திறக்கும் வசதி கொண்டுள்ளது.

இந்தோனேசியாவில் அறிமுகமாகி இருக்கும் இன்னோவா ஜெனிக்ஸ் (ஹைகிராஸ்) மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், ஆப்ஷனல் 2.0 லிட்டர் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்படுகிறது. இவற்றின் செயல்திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Tags:    

Similar News