இது புதுசு

டாடா ஹேரியர் EV இந்திய வெளியீடு - இணையத்தில் லீக் ஆன தகவல்!

Published On 2023-01-23 21:15 IST   |   Update On 2023-01-23 21:15:00 IST
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் பல்வேறு புது மாடல்களை காட்சிக்கு வைத்தது.
  • டாடா ஹேரியர் EV மாடல் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அனைவரும் கவர்ந்ததோடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு புது கார் மற்றும் கான்செப்ட் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. இவற்றில் அனைவரின் கவனத்தை ஈர்த்த மாடல்களாக கர்வ், சியெரா EV மற்றும் ஹேரியர் EV போன்றவை அமைந்தன. கர்வ் கூப் எஸ்யுவி மற்றும் ஹேரியர் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஹேரியர் EV மாடல் 16 ஆவது ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் யாரும் எதிர்பாராத வகையில், ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த 5-சீட்டர் எஸ்யுவி மாடல் OMEGA ஆர்கிடெக்ச்சரில் ஜென் 2 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ICE பிளாட்ஃபார்ம் என்ற போதிலும், இதில் ஃபிலாட் ஃபுளோர் மற்றும் ஃபியூவல் டேன்க் பகுதியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹேரியர் EV மாடல் டூயல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இத்துடன் முதல் முறையாக 4 வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ட்வின் மோட்டார் செட்டப் கொண்ட முதல் டாடா எலெக்ட்ரிக் கார் எனும் பெருமையை ஹேரியர் மாடல் பெறும் என தெரிகிறது. இதன் காரணமாக இந்த மாடல் V2L மற்றும் V2V அம்சங்கள் கிடைக்கும்.

காரின் வெளிப்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட முன்பறம், புதிய எல்இடி லைட் பார், புதிய ஷட் ஆஃப் முன்புற கிரில், புதிய முன்புற பம்ப்பர், புதிய ஹெட்லேம்ப் ஹவுசிங் உள்ளது. இதன் முன்புற ஃபெண்டர்களில் EV பேட்ஜிங், ஸ்மார்ட் டோர் ஹேண்டில்கள், ரிவைஸ்டு டெயில் லேம்ப்கள், எல்இடி லைட் பார், மேம்பட்ட ரியர் பம்ப்பர் உள்ளது.

ஹேரியர் EV மாடல் அதன் பெரும்பாலான அம்சங்கள் IC என்ஜின் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதன் உள்புறம் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டெட் தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். புதிய ஹேரியர் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 500 கிமீ ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது. 

Tags:    

Similar News