இது புதுசு

விரைவில் இந்தியா வரும் சுசுகி கட்டானா

Update: 2022-06-30 05:02 GMT
  • சுசுகி இந்தியா நிறுவனம் விரைவில் புது மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இந்த மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

சுசுகி இந்தியா நிறுவனம் கட்டானா லிட்டர்-கிளாஸ் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான டீசரை வெளியிட்டு உள்ளது. விரைவில் இந்த மாடல் விற்பனையகம் வரத் துவங்கி விடும் என தெரிகிறது.

சுசுகி நிறுவனத்தின் பெரிய மாடல்கள் பிரிவில் தற்போது 650சிசி வி ஸ்டாம் 650XT அட்வென்ச்சர் பைக், 1340சிசி ஹயபுசா உள்ளிட்ட மாடல்கள் மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரு மாடல்கள் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் நோக்கில் சுசுகி பிராண்டு கட்டானா லிட்டர் கிளாஸ் செமி-ஃபேர்டு மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.


சாமுராய் வீரர்கள் பயன்படுத்திய ஒற்றை எட்ஜ் கொண்ட வாளை தழுவி இந்த மோட்டார்சைக்கிளுக்கு கட்டானா என பெயரிடப்பட்டு உள்ளது. கட்டானா மாடலில் 999சிசி, இன் லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் K5 GSX-R1000 மாடலில் இருந்து பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் GSX-S1000 மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

2022 மாடலில் இந்த என்ஜின் கேம் ஷாப்ட்கள், வால்வு ஸ்ப்ரிங் மற்றும் ஏர்பாக்ஸ், எக்சாஸ்ட் சிஸ்டம் அப்டேட்களுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ரைடு-பை வயர் சிஸ்டம், சிறிய 40mm எலெக்ட்ரிக் திராட்டில், டிராக்‌ஷன் கண்ட்ரோல், பை டைரக்‌ஷனல் குயிக் ஷிப்டர், மூன்று திராட்டில் மேப்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் மேனுவல் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய யு.எஸ்.டி. ஃபோர்க், மோனோஷாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

புதிய சுசுகி கட்டானா மாடலில் ரேடியல் பிரெம்போ கேலிப்பர்கள் உள்ளன. இத்துடன் எல்.சி.டி. டிஸ்ப்ளே, டி.எப்.டி. யூனிட்கள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் புதிய சுசுகி கட்டானா மாடலின் விலை ரூ. 12 லட்சத்தில் நிர்ணயம் செய்யப்படலாம். இந்த மாடல் நின்ஜா 1000SX மற்றும் பி.எம்.டபிள்யூ. F 900 XR போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

Tags:    

Similar News