இது புதுசு

ஆறு புதிய 650சிசி மாடல்கள் - ராயல் என்பீல்டின் அதிரடி திட்டம்?

Published On 2022-12-01 10:51 GMT   |   Update On 2022-12-01 10:51 GMT
  • ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வரும் புது மோட்டார்சைக்கிள் மாடல் விவரங்கள் வெளியாகி உள்ளது.
  • சமீபத்தில் தான் ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீடியோர் 650 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.

ராயல் என்பீல்டு நிறுவனம் 2018 வாக்கில் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 என இரு மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இரு மாடல்களும் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகின்றன. இந்தியா மட்டும் இன்றி உலக சந்தைகளிலும் இந்த இரு மாடல்களும் அமோக வெற்றி பெற்றுள்ளன.

650 சிசி மாடல்கள் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் போட்டி மாடல்களை பின்னுக்குத் தள்ளி மிடில்வெயிட் மோட்டார்சைக்கிள் பிரிவில் ஏற்கனவே முன்னணியில் இருந்து வந்த பிரீமியம் பிராண்டுகளை முந்தியது. நல்ல வரவேற்பை தொடர்ந்து ராயல் என்பீல்டு நிறுவனம் தனது 650 சிசி பிரிவு வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த துவங்கி இருக்கிறது.

இந்த வரிசையில் தான் புதிதாக சூப்பர் மீடியோர் 650 மாடலை ஃபிளாக்‌ஷிப் குரூயிசர் மாடலாக ராயல் என்பீல்டு அறிமுகம் செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடலின் விலை ரூ. 4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடல் விலை விவரங்கள் ஜனவரி மாத வாக்கில் அறிவிக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து வினியோகம் 2023 பிப்ரவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. இந்த ரெட்ரோ மோட்டார்சைக்கிள் விவரங்கள ஏற்கனவே வெளியாகியுள்ளன.

Tags:    

Similar News