இது புதுசு

இந்தியாவில் ரி-எண்ட்ரி ஆகும் புதிய ரெனால்ட் டஸ்டர்

Published On 2022-11-24 10:52 GMT   |   Update On 2022-11-24 10:52 GMT
  • ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
  • தற்போது ரெனால்ட் இந்தியா நிறுவனத்திற்கு மிகப் பெரும் தொகை முதலீடாக கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய சந்தையில் ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் நிலைமை சற்று தடுமாற்றத்திலேயே இருந்து வருகிறது. எனினும், இந்த நிலை விரைவில் மாறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெனாட் மற்றும் நிசான் நிறுவனங்களின் இந்திய பிரிவுக்கு 500 மில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த முதலீட்டின் மூலம் CMF-B பிளாட்ஃபார்மை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ள முடியும். இது சாத்தியமாகும் பட்சத்தில் சமீபத்தில் நிறுத்தப்பட்ட டஸ்டர் மாடல் இந்தியாவில் மீண்டும் களமிறங்கலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் தங்களின் சர்வதேச தயாரிப்புகளை இந்தியாவுக்கு CBU முறையில் கொண்டுவரலாம். CMF பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முற்றிலும் புதிய டஸ்டர் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

எதிர்காலத்தில் இந்த காரின் எலெக்ட்ரிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவுக்காக மாற்றப்படும் CMF-B பிளாட்ஃபார்ம் பெட்ரோல், ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வசதியை வழங்கும். அந்த வகையில் முற்றிலும் புதிய டஸ்டர் மாடல் இந்தியாவில் 2024 அல்லது 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். நீண்ட இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் ரெனால்ட் நிறுவனம் அர்கானா கிராஸ்ஒவர் கூப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

இந்திய சாலைகளில் ரெனால்ட் நிறுவனம் அர்கானா மாடலின் சோதனைகளை ஏற்கனவே துவங்கி மேற்கொண்டு வருகிறது. புதிய 500 மில்லியன் டாலர்கள் முதலீடு பற்றி ரெனால்ட் மற்றும் நிசான் தரப்பில் இருந்து எந்த விதமான தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News