இது புதுசு

டாடா பன்ச்-க்கு போட்டியாக உருவாகும் புது ஹூண்டாய் கார்?

Published On 2022-11-29 10:42 GMT   |   Update On 2022-11-29 10:42 GMT
  • ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வரும் புது கார் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
  • புதிய ஹூண்டாய் கார் K1 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யும் திட்டம் பற்றி சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்த மாடல் சிட்ரோயன் C3 மற்றும் டாடா பன்ச் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். மேலும் இந்த கார் கிராண்ட் i10 நியோஸ் மாடலுடன் நிலை நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. புதிய பி1 செக்மெண்ட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடல் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம். புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் ஹூண்டாய் Ai3 CUV எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் நியோஸ் மற்றும் ஆரா மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கும் பிளாட்ஃபார்மிலேயே புதிய காரும் உருவாக்கப்பட இருக்கிறது.

அந்த வகையில், இந்த கார் கிராண்ட் i10 நியோஸ் மாடலில் வழங்கப்படும் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம் தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும் இந்த மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை எஸ்யுவி என்ற பெருமையை பெறும்.

புதிய ஹூண்டாய் காரில் பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜ், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஹூண்டாய் புளூ லின்க், கூல்டு ஸ்டோரேஜ் கன்சோல், எலெக்ட்ரிக் வசதியுடன் ORVM போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News