இது புதுசு

எம்ஜி ஆஸ்டர் மற்றும் ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம் - இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2022-12-02 11:06 GMT   |   Update On 2022-12-02 11:06 GMT
  • எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் இந்திய வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
  • ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எம்ஜி ZS EV தாய்லாந்தில் எம்ஜி VS என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபல மிட்சைஸ் எஸ்யுவி ZS மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கார் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இதுதவிர ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முன்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. எம்ஜி ZS EV தாய்லாந்து சந்தையில் எம்ஜி VS என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய எம்ஜி ZS ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம், ரி-வொர்க் செய்யப்பட்ட முகப்பு பகுதி, அளவில் பெரிய - வட்ட வடிவம் கொண்ட கிரில் உள்ளது. இத்துடன் மெல்லிய, கூர்மையான கிடைமட்டமாக பொருத்தப்பட்ட கிரில் காணப்படுகிறது. ஹெட்லேம்ப்களும் மாற்றப்பட்டு ஷார்ப்-எட்ஜ், ஆல் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. முன்புற பம்ப்பர் புதிதாக மாற்றப்பட்டு, டைமண்ட் பேட்டன், பெரிய ஏர் இண்டேக் வழங்கப்பட்டுள்ளது.

காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதன் மெஷிண்டு அலாய் வீல்களில் ரிவைஸ்டு டிசைன், டெயில் லேம்ப்களில் புதிய எல்இடி இன்சர்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் இண்டீரியர் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இதில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பெரிய பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.

தாய்லாந்தில் புதிய எம்ஜி ZS ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கிறது. இதில் 1.5 லிட்டர் 115 PS NA பெட்ரோல் என்ஜின், 1.3 லிட்டர் 140 PS டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. ZS EV மாடலில் தொடர்ந்து 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம். இது முழு சார்ஜ் செய்தால் 461 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய ZS அல்லது ZS EV மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், புது மாடல்கள் அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 துவக்கத்திலோ இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இரு மாடல்களின் தற்போதைய வெர்ஷன் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News