இது புதுசு

புதிய XUV400 ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் - மஹிந்திரா அதிரடி!

Published On 2022-11-30 11:12 GMT   |   Update On 2022-11-30 11:12 GMT
  • மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 எலெக்ட்ரிக் கார் செப்டம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • தற்போது மஹிந்திரா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் காரின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனம் XUV400 மாடல் மூலம் செப்டம்பர் மாத வாக்கில் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கியது. இதன் வெளியீடு அடுத்த ஆண்டு வாக்கில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் ஆட்டோமோடிவ் வடிவமைப்பாளர் பிரதாப் போஸ் மற்றும் முன்னணி அழகி ரிம்ஜிம் ததுவுடன் இணைந்து ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

மஹிந்திரா ஆட்டோமோடிவ் டெக் ஃபேஷன் டூர் சீசன் 6 நிகழ்வில் மஹிந்திரா XUV400 ஸ்பெஷல் எடிஷன் காட்சிப்படுத்தப்பட்டது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஃபேஷனை ஃபேப்ரிக்ஸ்-ஐ முதன்மை உபகரணமாக கொண்டு வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ஃபேப்ரிக் சார்ந்து உருவாக்கப்பட்ட தீம், ட்வின்-பீக் காப்பர் நிற மஹிந்திரா லோகோ புளூ நிற அவுட்லைன் பெற்று இருப்பதோடு ரிம்ஜிம் தது எக்ஸ் போஸ் கையெழுத்து இடம்பெற்று இருக்கிறது. இந்த லோகோ விண்ட்ஷீல்டு மற்றும் இதர வெளிப்புற பாகங்களில் பொருத்தப்படுகிறது.

காரின் உள்புறத்தில் ஃபேப்ரிக் சார்ந்த எலிமண்ட்கள் கேபின் முழுக்க காணப்படுகிறது. ரிம்ஜிம் தது எக்ஸ் போஸ் லோகோ சீட் ஹெட்ரெஸ்ட் மீது காணப்படுகிறது. இச்சுடன் ஆர்க்டிக் புளூ தீம் கார் இண்டீரியர் முழுக்க பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா XUV400 மாடல் பேஸ், EP மற்றும் EL.A என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த காரில் 39.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் உள்ளது.

இதில் உள்ள மோட்டார்கள் 150 ஹெச்பி பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 456 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை மஹிந்திரா XUV400 மாடல் 4200mm நீளமாக உள்ளது. 

Tags:    

Similar News