இது புதுசு

பிஎஸ்6 2 என்ஜின்களுடன் விரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் i20

Published On 2023-02-15 15:25 IST   |   Update On 2023-02-15 15:25:00 IST
  • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய i20 மாடல் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.
  • தற்போது விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் i20 காரின் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் விரைவில் நீக்கப்படுகிறது.

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய பிஎஸ்6 2 மற்றும் RDE புகை விதிகளுக்கு பொருந்தும் வென்யூ, கிரெட்டா மற்றும் அல்கசார் மாடல்களை தொடர்ந்து விரைவில் புதிய i20 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன் படி புதிய ஹூண்டாய் i20 மாடலில் பிஎஸ்6 2 மற்றும் RDE விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூண்டாய் i20 மாடல் மேம்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின்கள் 82 ஹெச்பி பவர் மற்றும் 118 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

 

இவற்றில் 1.2 என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 1.0 லிட்டர் என்ஜினுடன் DCT கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போதைய ஹூண்டாய் i20 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் விரைவில் நிறுத்தப்படும் என தெரிகிறது. இதே போன்ற அப்டேட் i20 N லைன் மாடலிலும் மேற்கொள்ளப்படலாம்.

புதிய பிஎஸ்6 2 மாற்றங்களின் படி ஹூண்டாய் i20 விலை ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை அதிகரிக்கப்படலாம். இத்துடன் புதிய கார் அம்சங்களிலும் ஹூண்டாய் நிறுவனம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ளும் என தெரிகிறது. இத்துடன் அனைத்து வேரியண்ட்களிலும் அதிகளவு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News