இது புதுசு

இந்திய டெஸ்டிங்கில் சிக்கிய ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட்

Published On 2022-11-28 11:12 GMT   |   Update On 2022-11-28 11:12 GMT
  • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கிராண்ட் i10 நியோஸ் மாடலை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டெஸ்டிங் இந்திய சாலைகளில் நடைபெற்று வருகிறது.

ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு மிட்-லைஃப் அப்டேட் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கான டெஸ்டிங் துவங்கி இருக்கிறது. புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சென்னை அருகில் உள்ள ஹூண்டாய் ஆலை பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய ஸ்பை படங்களில் புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறம் மூடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இந்த காரில் பூமராங் வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் பம்ப்பரின் ஓரத்தில் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இதன் முன்புற கிரில் தற்போது ஹெக்சகோனல் டிசைன் கொண்டிருக்கிறது.

பக்கவாட்டில் புதிய கிராண்ட் i10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய அலாய் வீல் டிசைன் கொண்டிருக்கிறது. காரின் பின்புறம் அதிகளவு மறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த காரில் புதிய டிசைன் கொண்ட எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

முன்னதாக ஜெர்மனியில் எடுக்கப்பட்ட ஸ்பை படங்களில் இந்த ஹேச்பேக் மாடல் ஸ்கை புளூ நிறம் கொண்டிருந்தது. இந்த நிறம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இது முற்றிலும் புதிதாக இருக்கும். இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யப்படும் மாடல் வைட் நிறம் கொண்டிருக்கிறது.

தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் கிராண்ட் i10 நியோஸ் மாடல்- டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், அக்வா டியல், ஃபியரி ரெட் மற்றும் போலார் வைட் என ஐந்து வித நிறங்களிலும், டூயல் டோன் நிற ஆப்ஷனிலும் கிடைக்கிறது. தற்போதைய ஸ்பை படங்களில் காரின் இண்டீரியர் பற்றிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், புது காரின் இண்டீரியரும் மாற்றப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது.

Photo Courtesy: Rushlane

Tags:    

Similar News