இது புதுசு

2022 எக்ஸ்டிரீம் 160R மாடலை அறிமுகம் செய்த ஹீரோ - விலை எவ்வளவு தெரியுமா?

Update: 2022-07-28 10:52 GMT
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2022 எக்ஸ்டிரீம் 160R மாடலின் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது.
  • புது மாடல் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்டிரீம் 160R மாடலை அப்டேட் செய்து இருக்கிறது. புதிய 2022 ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 148, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய எக்ஸ்டிரீம் 160R மாடல் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

வேரியண்ட் மற்றும் விலை விவரங்கள்:

ஹீரோ எக்ஸ்டிரீம் 160R சிங்கில் டிஸ்க் வேரியண்ட் ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 148

ஹீரோ எக்ஸ்டிரீம் 160R டூயல் டிஸ்க் வேரியண்ட் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்து 498

ஹீரோ எக்ஸ்டிரீம் 160R ஸ்டெல்த் வேரியண்ட் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 338

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


2022 எக்ஸ்டிரீம் 160R மாடலின் சீட் டிசைன் மாற்றப்பட்டு புதிதாக ஸ்ப்லிட் கிராப் ரெயில் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டேஷ்போர்டில் கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மாற்றப்பட்டு இருக்கிறது. இவை தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலில் 163சிசி சிங்கில் சிலிண்டர், ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 15 ஹெச்.பி. பவர், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இதன் கியர் ஷிப்ட் முறை 1-அப், 4-டவுன் ஆகும்.

Tags:    

Similar News