இது புதுசு

இந்தியா வரும் சிட்ரோயன் எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் - எப்போ தெரியுமா?

Published On 2022-08-08 10:40 GMT   |   Update On 2022-08-08 10:40 GMT
  • சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் தான் தனது குறைந்த விலை காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
  • சிட்ரோயன் நிறுவனம் மற்றொரு புது காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்டெலாண்டிஸ் நிர்வகிக்கும் சிட்ரோயன் பிராண்டு சமீபத்தில் தனது சிட்ரோயன் C3 ஹேச்பேக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சிட்ரோயன் C3 மாடல் கடும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய சிட்ரோயன் C3 மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சிட்ரோயன் நிறுவனம் மீண்டும் சந்தையில் கலக்கத்தை ஏற்படுத்த முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சிட்ரோயன் நிறுவனம் முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்ட புது காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் C3 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது.


சிட்ரோயன் C3 காரை தழுவி உருவாகும் எலெக்ட்ரிக் கார் டிசம்பர் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து விற்பனை ஏப்ரல் 2023 வாக்கில் துவங்க இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டு இருக்கும். இதில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 300 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் மாட்யுலர் CMP பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இந்த கார் வழக்கமான ICE மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான பாகங்கள் உள்நாட்டில் இருந்தே பயன்படுத்த இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை சிட்ரோயன் C3 எலெக்ட்ரிக் காரில் குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜிங், ஆட்டோமேடெட் கிளைமேட் கண்ட்ரோல், 10 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

விலையை பொருத்தவரை இந்திய சந்தையில் சிட்ரோயன் எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலின் விலை ரூ. 13 லட்சத்தில் இருந்து துவங்கும் என தெரிகிறது. அந்த வகையில் இந்த கார் டாடா டிகோர் EV மற்றும் எம்ஜி அறிமுகம் செய்ய இருக்கும் சிறிய எலெக்ட்ரிக் கார் போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாளராக அமையும்.

Tags:    

Similar News