ஆட்டோமொபைல்
ஸ்கோடா ஸ்லேவியா

ஸ்கோடா ஸ்லேவியா சர்வதேச வெளியீட்டு விவரம்

Published On 2021-10-30 14:13 GMT   |   Update On 2021-10-30 14:13 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய செடான் மாடல் கார் நவம்பர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஸ்லேவியா மாடல் நவம்பர் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் ஸ்கோடா ரேபிட் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகிறது. 

புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடல் ஹோண்டா சிட்டி, மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. ஸ்கோடா ஸ்லேவியா மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் இரண்டாவது கார் ஆகும். 



ஸ்கோடா ஸ்லேவியா மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்.கியூ.பி. ஏ0 ஐ.என். பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்த கார் 4541எம்.எம். அளவு நீளமும், 1752 எம்.எம். அளவு அகலமும், 1487 எம்.எம். அளவு உயரமாகவும் இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2651 எம்.எம். ஆகும். 

ஸ்கோடா ஸ்லேவியா மாடலில் 113 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் அல்லது 150 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News