ஆட்டோமொபைல்
டிரைடன் இ.வி. மாடல் ஹெச்

முழு சார்ஜ் செய்தால் 1200 கி.மீ. செல்லும் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

Published On 2021-10-14 05:15 GMT   |   Update On 2021-10-13 11:28 GMT
டிரைடன் இ.வி. நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது.


அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டிரைடன் இ.வி. இந்தியாவில் உற்பத்தி ஆலையை கட்டமைக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து மாடல் ஹெச் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை ஐதராபாத் நகரில் அறிமுகம் செய்து இருக்கிறது. டிரைடன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் முதல் எலெக்ட்ரிக் கார் இது ஆகும். 

இந்த எலெக்ட்ரிக் கார் 5690 எம்.எம். நீளமும், 2057 எம்.எம். உயரமும், 1880 எம்.எம். அகலமும் கொண்டிருக்கிறது. இதன் வீல்பேஸ் 3302 எம்.எம். ஆகும். டிரைடன் இ.வி. மாடல் ஹெச் எட்டு பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஏழு டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது. 



டிரைடன் மாடல் ஹெச் எஸ்.யு.வி. காரில் 200 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை ஹைப்பர்சார்ஜர் கொண்டு இரண்டு மணி நேரங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். 

இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 1200 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இந்தியாவில் ஆயிரம் கி.மீ. ரேன்ஜ் கொண்ட முதல் எலெக்ட்ரிக் காராக மாடல் ஹெச் இருக்கும்.
Tags:    

Similar News