ஆட்டோமொபைல்
பஜாஜ் பல்சர் என்எஸ்200

பல்சர் 250 இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2021-09-30 14:35 IST   |   Update On 2021-09-30 14:35:00 IST
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் 250 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பண்டிகை காலக்கட்டத்தில் புது மாடல்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல்கள் வரிசையில் பல்சர் 250 இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், பல்சர் 250 மாடல் பல்சர் சீரிசில் பெரும் மாடலாக இருக்கும். இந்த மோட்டார்சைக்கிள் செமி-பேர்டு டிசைன் முன்புறம் மிட்-சைஸ் பேரிங், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், டெலிஸ்கோபிக் முன்புற போர்க், அலாய் வீல்கள், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கிறது.



புதிய பல்சர் 250 மாடல் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்த மாடலில் 250சிசி, ஆயில் கூல்டு சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 28 பி.எஸ். திறன், 20 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்கலாம்.

Similar News