ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.பி.

மற்றொரு எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்

Published On 2021-09-07 13:22 IST   |   Update On 2021-09-07 13:22:00 IST
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய இ.கியூ.பி. இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது.


மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஐ.ஏ.ஏ. ஆட்டோ விழாவில் தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது. முன்னதாக 4 புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்த நிலையில், தற்போது இ.கியூ.பி. மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது.

இந்த எலெக்ட்ரிக் கார் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு இதே மாடல் இ.கியூ.பி. 300 மற்றும் இ.கியூ.பி. 350 என இரண்டு வேரியண்ட்களில் அமெரிக்காவில் அறிமுகமாகிறது. புதிய இ.கியூ.பி. ஏழு இருக்கைகள் கொண்ட முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.



புதிய எலெக்ட்ரிக் காரில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 66.5 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கி இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 419 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனுடன் வரும் எலெக்ட்ரிக் மோட்டார் இருவித டியூனிங்கில் கிடைக்கிறது.

Similar News