ஆட்டோமொபைல்
டாடா பன்ச்

புதிய பெயரில் அறிமுகமான டாடா ஹெச்.பி.எக்ஸ்.

Published On 2021-08-23 08:59 GMT   |   Update On 2021-08-23 08:59 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் புதிய பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பன்ச் எனும் பெயரில் புது மைக்ரோ எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக ஹெச்.பி.எக்ஸ். அல்லது ஹான்பில் எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வந்த நிலையில், புது மைக்ரோ எஸ்.யு.வி. பன்ச் எனும் பெயரில் விற்பனைக்கு வருகிறது.

புதிய டாடா பன்ச் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொண்டு ஆல்பா-ஆர்க் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் நெக்சான் சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது. டாடா பன்ச் மாடல் இந்திய சந்தையில் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வருகிறது.



டாடா பன்ச் மாடலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா பன்ச் மாடல் மாருதி சுசுகி இக்னிஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News