ஆட்டோமொபைல்
டாடா டிகோர் இ.வி. சிப்டிரான்

வெளியீட்டுக்கு முன் எலெக்ட்ரிக் கார் விவரங்களை அறிவித்த டாடா மோட்டார்ஸ்

Published On 2021-08-18 09:15 GMT   |   Update On 2021-08-18 09:15 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் இ.வி. சிப்டிரான் மாடல் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் இ.வி. சிப்டிரான் மாடல் விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய டிகோர் இ.வி. சிப்டிரான் மாடல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

வெளியீட்டுக்கு முன் டிகோர் இ.வி. சிப்டிரான் மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட டாடா விற்பனை மையங்களில் டிகோர் இ.வி. சிப்டிரான் மாடலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். 



சிப்டிரான் தொழில்நுட்பம் பயன்படுத்தும் இரண்டாவது கார் மாடல் டிகோர் இ.வி. ஆகும். இதில் உள்ள சிப்டிரான் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய மாடலில் 55 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார், 26kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது.

இவை 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன. காரை முழுமையாக சார்ஜ் செய்ய 8.5 மணி நேரம் ஆகும். பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தினால் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 1 மணி நேரம் ஆகும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. 

Tags:    

Similar News