ஆட்டோமொபைல்
சிம்பிள் ஒன்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 236 கி.மீ. செல்லும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

Published On 2021-08-16 11:51 IST   |   Update On 2021-08-16 11:51:00 IST
சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.


சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1,09,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இது ஒற்றை வேரியண்ட் மற்றும் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

சிம்பிள் ஒன் மாடலில் கூர்மையான தோற்றம், முக்கோண வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் மற்றும் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்.இ.டி. டெயில் லேம்ப், ஒற்றை இருக்கை, அலாய் வீல்கள், பின்புறம் கிராப் ரெயில்கள் உள்ளன. 



சிம்பிள் ஒன் மாடலில் 4.8 kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 4.5kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 72 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 201 கிலோமீட்டர் வரை செல்லும். தரமான சாலைகளில் இந்த ஸ்கூட்டர் 236 கிலோமீட்டர் வரை செல்லும். 

இந்த ஸ்கூட்டருடன் சிம்பிள் லூப் பெயரில் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. சிம்பிள் லூப் கொண்டு 60 நொடிகள் சார்ஜ் செய்தால் 2.5 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். வரும் மாதங்களில் நாடு முழுக்க சுமார் 300-க்கும் அதிக இடங்களில் பாஸ்ட் சார்ஜர்களை நிறுவ சிம்பிள் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. வீட்டில் சார்ஜ் செய்து கொள்ளவும் சிம்பிள் லூப் வழங்கப்படுகிறது.

Similar News