ஆட்டோமொபைல்
ஆடி RS5 ஸ்போர்ட்பேக்

அசத்தல் அம்சங்களுடன் ஆடி RS5 ஸ்போர்ட்பேக் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-08-09 07:18 GMT   |   Update On 2021-08-09 07:18 GMT
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய RS5 ஸ்போர்ட்பேக் மாடல் வி6 பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.


ஆடி இந்தியா நிறுவனம் புதிய RS5 ஸ்போர்ட்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்போர்ட் கார் துவக்க விலை ரூ. 1.04 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மேம்பட்ட மாடல் இந்தியாவுக்கு CBU முறையில் கொண்டுவரப்படுகிறது. இதன் வெளிப்புற தோற்றத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

புதிய 2021 ஆடி RS5 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.9 லிட்டர், ட்வின்-டர்போ வி6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 444 பி.ஹெச்.பி. திறன், 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.



இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஆடி RS5 ஸ்போர்ட்பேக் நான்கு கதவுகளை கொண்டிருக்கிறது. 

இந்த மாடலில் RS சார்ந்த பிரத்யேக கிரில், ஹனிகொம்ப் இன்சர்ட்கள், மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. டெயில் லைட்கள், ஸ்பாயிலர் குரோம் பினிஷ் செய்யப்பட்ட எக்சாஸ்ட் டிப்கள், 19 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

Tags:    

Similar News