ஆட்டோமொபைல்
போர்டு பிகோ

போர்டு பிகோ ஆட்டோமேடிக் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-07-23 08:22 GMT   |   Update On 2021-07-23 08:22 GMT
போர்டு நிறுவனத்தின் பிகோ ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட போர்டு பிகோ மாடல் இந்தியாவில் அறிமுகமானது. புதிய பிகோ மாடல் துவக்க விலை ரூ. 7.75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புது வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பிகோ மாடல்களுடன் இணைகிறது. பிகோ ஆட்டோமேடிக் வேரியண்டில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் யூனிட் உள்ளது.

இந்த ஆப்ஷன் பிகோ டைட்டானியம் மற்றும் டைட்டானியம் பிளஸ் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. டைட்டானியம் பிளஸ் மாடலின் விலை ரூ. 8.20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. போர்டு பிகோ புது வேரியண்டில் இகோஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது.



இந்த என்ஜினுடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுவதால், 95 பி.ஹெச்.பி. பவர், 119 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பிகோ ஆட்டோமேடிக் வேரியண்டில் கூடுதலாக ஸ்போர்ட் மோட் வசதியும் வழங்கப்படுகிறது. பிகோ ஆட்டோமேடிக் வேரியண்ட் லிட்டருக்கு 16 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை பிகோ ஆட்டோமேடிக் மாடலில் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரெயின்-சென்சிங் வைப்பர், ரிமோட் கீலெஸ் என்ட்ரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News