ஆட்டோமொபைல்
சுசுகி கார்

சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2021-07-20 08:07 GMT   |   Update On 2021-07-20 08:11 GMT
சுசுகி மோட்டார் கார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
 

ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளரான சுசுகி மோட்டார் கார்ப் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் 2025 வாக்கில் களமிறங்க இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்கென முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் காம்பேக்ட் மாடலை சுசுகி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி ரூ. 11 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.



எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையின் காம்பேக்ட் கார்கள் பிரிவில் கவனம் செலுத்த சுசுகி திட்டமிட்டு இருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளராக மாருதி சுசுகி இருக்கிறது. இந்திய விற்பனையில் மாருதி நிறுவனத்தின் ஆல்டோ, வேகன்ஆர், பலேனோ மற்றும் ஸ்விப்ட் போன்ற மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்டை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. எனினும், இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
Tags:    

Similar News