ஆட்டோமொபைல்
2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி

சக்திவாய்ந்த என்ஜின்களுடன் 2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி அறிமுகம்

Published On 2021-07-15 07:52 GMT   |   Update On 2021-07-15 07:52 GMT
பல்வேறு புதிய அம்சங்கள் கொண்ட 2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.


ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் 2021 டிஸ்கவரி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி துவக்க விலை ரூ. 88.06 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். முன்னதாக லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிபென்டர் 90 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 
 
2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடலின் வெளிப்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், புது பவர்டிரெயின் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 2017 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிஸ்கவரி மாடலே இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.



புதிய மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதன் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த காரில் 11.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

2021 டிஸ்கவரி மாடல் 2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், 3 லிட்டர், 6 சிலிண்டர் என்ஜின் மற்றும் 3 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 296 பி.ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க், 355 பி.ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 296 பி.ஹெச்.பி. பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. 

இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் வால்வோ XC90, பி.எம்.டபிள்யூ. X7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News