ஆட்டோமொபைல்
ஜாவா மோட்டார்சைக்கிள்

போர் வெற்றியை கொண்டாட இரு புது நிறங்களை அறிமுகம் செய்த ஜாவா

Published On 2021-07-12 10:34 GMT   |   Update On 2021-07-12 10:34 GMT
1971 போர் வெற்றியின் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் மோட்டார்சைக்கிளை இரு நிறங்களில் அறிமுகம் செய்தது.


கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் ஜாவா கிளாசிக் காக்கி மற்றும் மிட்நைட் கிரே நிறங்களை அறிமுகம் செய்தது. இரு நிறங்களும் 1971 போர் வெற்றியின் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது நிறம் தவிர மோட்டார்சைக்கிளில் இந்திய ராணுவ சின்னமும் இடம்பெற்று இருக்கிறது. 



ஜாவா காக்கி மற்றும் மிட் நைட் கிரே மாடல்கள் விலை ரூ. 1,93,357 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு நிற ஆப்ஷன்களும் மேட் பினிஷ் மற்றும் ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிளாக்டு-அவுட் ஸ்போக் வழங்கப்பட்டு உள்ளது. காஸ்மெடிக் அப்கிரேடுகள் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வெர்ஷன் கொண்ட மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

ஜாவா மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் 293சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 27.02 நியூட்டன் மீட்டர் டார்க் திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News