ஆட்டோமொபைல்
ஸ்கோடா குஷக்

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஸ்கோடா குஷக்

Published On 2021-06-29 13:27 IST   |   Update On 2021-06-29 13:27:00 IST
ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் எஸ்யுவி மாடல் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்கு வந்தது.

ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் குஷக் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கோடா குஷக் மாடல் விலை ரூ. 10.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்தியாவில் ஸ்கோடா குஷக் மாடல் மூன்று வேரியண்ட் மற்றும் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

புதிய குஷக் மாடலை வாடிக்கையாளர்கள் ஸ்கோடா ஆன்லைன் தளம் அல்லது அருகாமையில் உள்ள விற்பனையகம் சென்று நேரடியாக முன்பதிவு செய்யலாம். ஸ்கோடா குஷக் 1 லிட்டர் TSI வேரியண்ட்களின் வினியோகம் அடுத்த மாதம் துவங்குகிறது. 1.5 லிட்டர் TSI வேரியண்ட்கள் ஆகஸ்ட் மாதத்தில் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.



ஸ்கோடா நிறுவனத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் முதல் மாடலாக குஷக் இருக்கிறது. புதிய ஸ்கோடா குஷக் கேன்டி வைட், பிரிலியண்ட் சில்வர், ஹனி ஆரஞ்சு, கார்பன் ஸ்டீல் மற்றும் டொர்னாடோ ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யுவி 1 லிட்டர் TSI மற்றும் 1.5 லிட்டர் TSI என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இதன் 1 லிட்டர் TSI என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 1.5 லிட்டர் TSI என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

Similar News