ஆட்டோமொபைல்
அலௌடா எம்கே3

உலகின் முதல் பறக்கும் ரேஸ் கார் அறிமுகம்

Published On 2021-06-21 09:55 GMT   |   Update On 2021-06-21 09:55 GMT
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் உலகின் முதல் பறக்கும் ரேஸ் கார் மாடலை வெற்றிகரமாக சோதனை செய்து இருக்கிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலௌடா ஏரோனாடிக்ஸ் நிறுவனம் அலௌடா எம்கே3 பறக்கும் காரை சோதனை செய்துள்ளது. முன்னதாக இந்த மாடல் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பறக்கும் காரை சிமுலேட்டர் மூலம் இயக்க முடியும்.



அலௌடா எம்கே3 1950 மற்றும் 1960-க்களை சேர்ந்த ரேசிங் கார்களை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பறக்கும் கார் வெர்டிக்கல் டேக்-ஆப் மற்றும் லேண்டிங் செய்யும் திறன் கொண்டுள்ளது. வெறும் 130 கிலோ எடை கொண்டிருக்கும் இந்த பறக்கும் கார் அதிகபட்சம் 80 கிலோ வரையிலான எடையை சுமந்து செல்லும். 

எலெக்ட்ரிக் பவர் கொண்ட அலௌடா எம்கே3 ரேஸ் கார் 429 பிஹெச்பி திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது வானில் 1640 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டுள்ளது. 
Tags:    

Similar News