ஆட்டோமொபைல்
பிஎஸ்6 பி.எம்.டபிள்யூ. R 1250 GS

விரைவில் இந்தியா வரும் பிஎஸ்6 பி.எம்.டபிள்யூ. R 1250 GS

Published On 2021-06-20 03:34 GMT   |   Update On 2021-06-20 03:34 GMT
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனத்தின் பிஎஸ்6 ரக R 1250 GS அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் பிஎஸ்6 ரக R 1250 GS அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைதளங்களில் தெரிவித்து இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடல் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் இந்த மாடல் யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் 1254சிசி, ஏர்/லிக்விட்-கூல்டு, பிளாட்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் பி.எம்.டபிள்யூ. ஷிப்ட்கேம் தொழில்நுட்பம் உள்ளது. இது 134 பி.ஹெச்.பி. பவர், 142 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை வழங்குகிறது.



இதன் இந்திய வேரியண்டும் இதேபோன்ற செயல்திறன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய பி.எம்.டபிள்யூ. R 1250 GS மாடலில் புல் எல்.இ.டி. லைட்டிங், புளூடூத் வசதி கொண்ட டி.எப்.டி. டிஸ்ப்ளே, டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஏ.பி.எஸ். ப்ரோ, மூன்று விதமான ரைட் மோட்கள் உள்ளன.

இத்துடன் மின்சக்தி மூலம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், ஹீடெட் சீட்கள், ரைட் ப்ரோ மோட்கள், ஆட்டோமேட் செய்யப்பட்ட ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், டைனமிக் பிரேக் அசிஸ்டண்ட், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகின்றன.
Tags:    

Similar News