ஆட்டோமொபைல்
2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்

2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-06-18 10:31 GMT   |   Update On 2021-06-18 10:31 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2021 எஸ் கிளாஸ் மாடல் இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வந்தது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021 எஸ் கிளாஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எஸ் கிளாஸ் மாடல் துவக்க விலை ரூ. 2.17 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய எஸ் கிளாஸ் மாடல் ஒரு வேரியண்ட் மற்றும் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

புதிய 2021 எஸ் கிளாஸ் மாடலுக்கான முன்பதிவு மெர்சிடிஸ் பென்ஸ் வலைதளத்தில் மேற்கொள்ளலாம். இதன் வினியோகம் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. 2021 மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2.19 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும்.



மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மாடல் சிபியு முறையில் விற்பனை செய்யப்படுகிறது. புது எஸ் கிளாஸ் மாடலை வாங்க இதுவரை சுமார் 150-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். புதிய பென்ஸ் எஸ் கிளாஸ் அப்சிடியன் பிளாக், ஆனிக்ஸ் பிளாக், நாடிக் புளூ, ரூபெலிட் ரெட், மோஜேவ் சில்வர், ஹை-டெக் சில்வர், எமரால்டு கிரீன் மற்றும் செலனைட் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

2021 பென்ஸ் எஸ் கிளாஸ் மாடல் 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 362 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இந்த வேரியண்ட் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.1 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

டீசல் என்ஜின் கொண்ட மாடல் 326 பிஹெச்பி பவர், 700 நியூட்டர் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.40 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. 
Tags:    

Similar News