ஆட்டோமொபைல்
2021 பிஎம்டபிள்யூ S1000R

விரைவில் இந்தியா வரும் பிஎம்டபிள்யூ S1000R

Published On 2021-06-05 10:00 GMT   |   Update On 2021-06-05 10:00 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் S1000R மோட்டார்சைக்கிள் முந்தைய மாடலை விட 6.5 கிலோ எடை குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.


பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ S1000R மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிஎம்டபிள்யூ S1000R நேக்கட் ஸ்போர்ட் வெர்ஷன் ஆகும். இதன் என்ஜின், பிரேம், ஸ்விங் ஆர்ம் உள்ளிட்டவை முந்தைய மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படுகிறது.



இதன் டிசைன் சிறிதளவு மாற்றப்பட்டு புது பாடி பேனல்கள், எல்இடி ஹெட்லைட், டிஆர்எல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய பிஎம்டபிள்யூ S1000R மாடலில் பிளெக்ஸ் பிரேம் சேசிஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 199 கிலோ எடை கொண்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 6.5 கிலோ குறைவு ஆகும். 

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ S1000R மாடலில் 999சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 162 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.2 நொடிகளில் எட்டிவிடும். இது அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
Tags:    

Similar News