ஆட்டோமொபைல்
மெக்லாரென் சூப்பர்கார்

இந்திய சந்தையில் களமிறங்கும் மெக்லாரென்

Published On 2021-05-28 12:56 IST   |   Update On 2021-05-28 12:56:00 IST
பிரீமியம் சூப்பர்கார் உற்பத்தி செய்யும் மெக்லாரென் நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ப்ரிட்டனை சேர்ந்த பிரீமியம் சூப்பர்கார் உற்பத்தியாளரான மெக்லாரென் இந்திய சந்தையில் களமிறங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களுக்கென விற்பனை முகவர்களை நியமிப்பது, சர்வீஸ் சேவையை துவங்க திட்டமிட்டுள்ளது.

மெக்லாரென் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மற்ற பகுதிகளுடன் இந்தியாவும் இணைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கான வலைதளம் இன்னும் துவங்கப்படவில்லை. மெக்லாரென் வாகனங்கள் அனைத்தும் கார்பன் பைபர் கொண்டு உருவாக்கப்படுகின்றன.



இந்தியாவில் முதற்கட்டமாக ஜிடி, அர்டுரா 720எஸ் மற்றும் 720எஸ் ஸ்பைடர் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்ய மெக்லாரென் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய சந்தையில் லம்போர்கினி, போர்ஷ், பெராரி மற்றும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக மெக்லாரென் களமிறங்குகிறது. எனினும், இதுகுறித்து மெக்லாரென் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

Similar News