ஆட்டோமொபைல்
ஹோண்டாஜெட் எலைட் எஸ்

ஆடம்பர விமானத்தை அறிமுகம் செய்த ஹோண்டா

Published On 2021-05-27 13:50 IST   |   Update On 2021-05-27 13:50:00 IST
ஹோண்டா நிறுவனத்தின் முதல் ஆடம்பர விமானம் பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது.

ஹோண்டா நிறுவனம் குறைந்த எடை கொண்ட சிறு விமானத்தை உருவாக்கி இருக்கிறது. பல ஆண்டு கால தொடர் முயற்சி காரணமாக இந்த விமானத்திற்கு தேவையான சான்றிதழ்கள் வாங்கப்பட்டு இருக்கிறது. ஹோண்டாவின் முதல் விமானம் ஹோண்டாஜெட் எலைட் எஸ் என அழைக்கப்படுகிறது.



ஓவர்-தி-விங்-என்ஜின் மவுண்ட் கொண்டிருக்கும் ஹோண்டாஜெட் எலைட் எஸ் சிறப்பான டேக்-ஆப் வெயிட் கொண்டிருக்கிறது. இதன் டேக்-ஆப் வெயிட் 90 கிலோ வரை அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் கூடுதல் பயணிகள் இதில் பயணம் செய்யலாம். இத்துடன் அதிகபட்சம் 225 கிலோமீட்டர் வரை கடக்க முடியும்.

தற்போது பல்வேறு கார் மாடல்களில் பரவலாக வழங்கப்படும் ஆட்டோபைலட் அம்சம் இந்த விமானத்தில் உள்ளது. இது அட்வான்ஸ்டு ஸ்டீரிங் ஆக்மென்டேஷன் சிஸ்டம் என அழைக்கிறது. இதனால் விமான சற்று நேரம் ஓய்வு எடுக்க முடியும். இந்த விமானம் கன்மெட்டல், லூக்ஸ் கோல்டு மற்றும் டீப் சீ புளூ நிறங்களில் கிடைக்கிறது. தனி விமானத்தை வாங்கி பயன்படுத்த நினைப்போருக்கு புதிய ஹோண்டாஜெட் எலைட் எஸ் சிறந்த தேர்வாக இருக்கும். 

Similar News