ஆட்டோமொபைல்
போர்டு எலெக்ட்ரிக் பிக்கப் டிரக்

போர்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் அறிமுகம்

Published On 2021-05-20 09:44 GMT   |   Update On 2021-05-20 09:44 GMT
போர்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் 563 பிஹெச்பி திறன் கொண்டிருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


அமெரிக்காவை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போர்டு தனது முதல் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் எப்-150 லைட்னிங் என அழைக்கப்படுகிறது. புதிய எப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் கனெக்டெட் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

போர்டு எப் 150 லைட்னிங் இரட்டை எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்டிருக்கிறது. இந்த பிக்கப் டிரக் 563 பிஹெச்பி பவர், 1050 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4 நொடிகளில் எட்டிவிடும். 



இந்த மாடலில் 115 முதல் 150 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதனுடன் சூப்பர் பாஸ்ட் டிசி சார்ஜர் வழங்கப்படுகிறது. இது 87 கிலோமீட்டர்கள் பயணிப்பதற்கான சார்ஜ் செய்ய 10 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. இதன் பேட்டரியை 15 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 41 நிமிடங்கள் ஆகும்.

புதிய எப்-150 லைட்னிங் எலெக்ட்ரிக் டிரக் மாடல் துவக்க விலையை 39,974 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30 லட்சம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்துள்ளது.
Tags:    

Similar News