ஆட்டோமொபைல்
மஹிந்திரா மராசோ

ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் மராசோ ஆட்டோமேடிக் வேரியண்ட்

Published On 2021-05-18 08:08 GMT   |   Update On 2021-05-18 08:08 GMT
மஹிந்திரா நிறுவனம் தனது மராசோ மாடல் புது வேரியண்ட்டை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
 

மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ ஏஎம்டி வேரியண்ட் இந்திய வெளியீடு பற்றிய புது தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வகையில் தற்போது, மராசோ ஏஎம்டி வேரியண்ட் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.



தற்போது மஹிந்திரா நிறுவனம் XUV700 மற்றும் புதிய தலைமுறை ஸ்கார்பியோ என இரு மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பிஎஸ்6 மராசோ மாடலில் முதலீடு செய்து இருப்பதாக மஹிந்திரா சமீபத்தில் அறிவித்தது. மேலும் இந்த காரின் ஆட்டோமேடிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறது.

பிஎஸ்6 மராசோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.1 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவில்லை. இதில் வழங்கப்பட இருக்கும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆட்டோஷிப்ட் என அழைக்கபடலாம்.
Tags:    

Similar News