ஆட்டோமொபைல்
ஹஸ்க்வர்னா வெக்டார்

பஜாஜ் செட்டாக் சார்ந்த புது ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

Published On 2021-05-08 10:26 GMT   |   Update On 2021-05-08 10:26 GMT
ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் வெக்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


ஹஸ்க்வர்னா வெக்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டர் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இ 01 கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.  வெக்டார் மாடல் பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தழுவி உருவாகி இருக்கிறது.

இந்த ஸ்கூட்டரின் பவர்டிரெயின் அம்சங்கள் செட்டாக் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. ஹஸ்க்வர்னா வெக்டார் பூனே அருகில் செயல்பட்டு வரும் பஜாஜ் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. ஹஸ்க்வர்னா நிறுவனம் ஆப்-ரோடு மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்வதில் பிரபல நிறுவனமாக அறியப்படுகிறது.



சமீப காலங்களில் ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளது. அதன்படி கடந்த ஆண்டு இ 01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்டை ஹஸ்க்வர்னா அறிமுகம் செய்தது. இதில் எதிர்கால ரெட்ரோ தோற்றம் கொண்டிருந்தது.

முன்னதாக ஹஸ்க்வர்னா நிறுவனம் இ பைலென் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இது ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். சில தினங்களுக்கு முன் வெளியான தகவல்களில் ஹஸ்க்வர்னா இரு எலெக்ட்ரிக் வாகனங்களை அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக கூறப்பட்டது.
Tags:    

Similar News