ஆட்டோமொபைல்
ஸ்கோடா பேபியா

புதிய தலைமுறை ஸ்கோடா கார் வரைபடம் வெளியீடு

Published On 2021-04-24 10:10 GMT   |   Update On 2021-04-24 10:10 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பேபியா மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


ஸ்கோடா பேபியா புதிய தலைமுறை மாடல் உருவாகி வருகிறது. இந்த மாடலின் டிசைன் வரைபடங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கின்றன. நான்காவது தலைமுறை சூப்பர்மினி மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஸ்கோடா பேபியா வோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB-A0 பிளாட்பார்மில் உருவாகிறது. வரைபடங்களின் படி புதிய ஸ்கோடா கார் ஆக்டேவியா மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் முந்தைய வேரியண்ட்களை விட அளவில் பெரியதாக இருக்கிறது. 



மேலும் இதன் நீலம், அகலம் மற்றும் உயரம் என காரின் வெளிப்புறம் முழுக்க முந்தைய மாடலை விட பெரியதாகி இருக்கிறது. இந்த காரின் உள்புறமும் மாற்றங்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய பேபியா மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ, 1.0 லிட்டர் டிஎஸ்ஐ ஆப்ஷன் வழங்கப்படலாம். 

வரும் வாரங்களில் அறிமுகமாக இருக்கும் ஸ்கோடா பேபியா ஆண்டு இறுதியில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய பேபியா மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
Tags:    

Similar News