ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் EQB

மெர்சிடிஸ் பென்ஸ் EQB அறிமுகம்

Published On 2021-04-20 16:21 GMT   |   Update On 2021-04-20 16:21 GMT
ஷாங்காய் ஆட்டோ விழாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்தது.


மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது EQ சீரிசில் புது மாடலை அறிமுகம் செய்தது. கடந்த வாரம் EQS மாடல் அறிமுகமான நிலையில், தற்போது EQB அறிமுகம் செய்யப்பட்டது. ஆட்டோ ஷாங்காய் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய EQB முதற்கட்டமாக சீன சந்தையில் விற்பனைக்கு வருகிறது. 

மெர்சிடிஸ் பென்ஸ் EQB மாடல் ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தையில் 2022 வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. புதிய கார் GLB மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் உள்புறம் அகலமான புளோட்டிங் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் MBUX சிஸ்டம் வழங்கப்படுகிறது.



புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார் முன்புறம் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 66.5kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதில் உள்ள மோட்டார்கள் 270 பிஹெச்பி பவர் வழங்குகின்றன. இதன் ஏஎம்ஜி வேரியண்ட் 290 பிஹெச்பி வழங்குகிறது. 

இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 470 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 11kW AC பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News