ஆட்டோமொபைல்
டொயோட்டா GR 86

புதிய GR 86 மாடலை அறிமுகம் செய்த டொயோட்டா

Published On 2021-04-06 07:58 GMT   |   Update On 2021-04-06 07:58 GMT
டொயோட்டா நிறுவனம் சர்வதேச சந்தையில் கசூ ரேசிங் டியூன் செய்யப்பட்ட 86 மாடலை அறிமுகம் செய்தது.

டொயோட்டா நிறுவனம் விர்ச்சுவல் முறையில் நடைபெற்ற நிகழ்வில் புதிய GR 86 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த கார் புதிய 4 சிலிண்டர், 2.4 லிட்டர் என்ஜின் பெற்று இருக்கிறது. சுபாரு உற்பத்தி செய்த என்ஜின் 235 பிஎஸ் பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

புதிய டொயோட்டா GR 86 மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.3 நொடிகளில் எட்டிவிடும். புதிய GR 86 தோற்றத்தில் சுபாரு BRZ போன்றே காட்சியளிக்கிறது. இதன் வடிவமைப்பு GR சுப்ரா மாடலை தழுவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் மேம்படுத்தப்பட்டு அகலமான GR-ஸ்பெக் கிரில் மற்றும் ஏர் டக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.



காரின் உள்புறம் கருப்பு நிறத்தால் ஆன இன்டீரியர் மற்றும் சிவப்பு நிற இன்சர்ட்கள் உள்ளன. இத்துடன் ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்போடெயின்மென்ட் தொடுதிரை, டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்போர்ட் சீட் போன்றவை உள்ளன. 

GR சுப்ரா, GR யாரிஸ் மற்றும் GR 86 மாடல்களில் முன்புற என்ஜின் மற்றும் ரியல்-வீல் டிரைவ் உள்ளன. புதிய GR 86 ஜப்பான் நாட்டில் நவம்பர் மாத துவக்கத்திலோ டிசம்பர் மாதத்திலோ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News