ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் கார்

ஏழு ஏஎம்ஜி மாடல்களை அறிமுகம் செய்யும் மெர்சிடிஸ் பென்ஸ்

Published On 2021-03-27 15:41 IST   |   Update On 2021-03-27 15:41:00 IST
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏழு புதிய ஏஎம்ஜி மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இ கிளாஸ் பேஸ்லிப்ட், ஏ கிளாஸ் லிமோசின் போன்ற மாடல்களை இந்திய சந்தையில் இந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் மேலும் சில ஏஎம்ஜி மாடல்களை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டு இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் மார்டின் வென்க் தெரிவித்தார்.



தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மார்டின் வென்க் கூறும் போது, `இந்த ஆண்டு மட்டும் மொத்தம் ஏழு ஏஎம்ஜி மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புது மாடல்களை அறிமுகம் செய்ய ஆவலுடன் இருக்கிறோம்' என தெரிவித்தார். 

இதுதவிர சில ஏஎம்ஜி மாடல்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இவை பூனேவில் உள்ள சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூப், ஏஎம்ஜி ஏ35 செடான் போன்ற மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்கிறது.

Similar News