ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்ஆர்

புது மோட்டார்சைக்கிள் டீசரை வெளியிட்ட பிஎம்டபிள்யூ

Published On 2021-03-23 08:23 GMT   |   Update On 2021-03-23 08:23 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் எம் சீரிஸ் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் எம் 1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளை கடந்த ஆண்டு அறிவித்து சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எம் 1000 ஆர்ஆர் மாடல் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் எம் சீரிசில் மோட்டார்சைக்கிள் ஆகும். 

இந்த மோட்டார்சைக்கிள் எஸ் 1000 ஆர்ஆர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் எடை குறைவாகவும், எஸ் சீரிஸ் மாடலை விட அதிக திறன் கொண்டுள்ளது. எம் 1000 ஆர்ஆர் மாடல் அக்ரபோவிக் டைட்டானியம் புல் சிஸ்டம் கொண்டு உருவாகி இருக்கிறது. இதனால் இந்த மாடலின் எடை 3.7 கிலோ வரை குறைந்துள்ளது. 



இதில் உள்ள 999சிசி இன்-லைன் என்ஜின் எஸ் 1000 ஆர்ஆர் மாடலை விட 0.4 நொடிகள் 200 கிலோமீட்டர் வேகத்தை எட்டும். மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 0.2 நொடிகள் விரைவாக எட்டிவிடும். இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் கார்பன்-பைபர் விங்லெட்கள் அதிகளவு ஏரோடைனமிக் டவுன்-போர்ஸ் வழங்கும். இதனால் அதிவேகமாக செல்லும் போது முன்புற சக்கரம் தரையில் இருந்து உயராமல் இருக்கும். 

எம் 1000 ஆர்ஆர் மாடலில் ரேஸ் ப்ரோ ரைடிங் மோட் உள்ளது. இது பந்தய களங்களில் பயன்படுத்த ஏதுவாக டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல் மற்றும் என்ஜின் பிரேக்கிங் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. மேலும் இதில் லான்ச் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் மாடல் ஏப்ரல் மாதத்தின் இரண்டாவகு வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறைந்த எண்ணிக்கையிலேயே கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 40 முதல் ரூ. 50 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
Tags:    

Similar News