ஆட்டோமொபைல்
2021 மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ்

விரைவில் இந்தியா வரும் புது பென்ஸ் கார்

Published On 2021-03-11 07:32 GMT   |   Update On 2021-03-11 07:32 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய இ கிளாஸ் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கிறது.


மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ கிளாஸ் பேஸ்லிப்ட் மாடல் 2020 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் மார்ச் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து இருக்கிறது.

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் 15 மாடல்களில் இதுவும் ஒன்று. முந்தைய திட்டத்தில் மாற்றம் செய்து புதிய இ கிளாஸ் பேஸ்லிப்ட் மாடலை முன்கூட்டியே அறிமுகம் செய்வதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து உள்ளது. 



இ கிளாஸ் மட்டுமின்றி புதிய ஏ கிளாஸ் லிமோசின் மாடலையும் மெர்சிடிஸ் நிறுவனம் இந்த மாதமே அறிமுகம் செய்கிறது. புதிய பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மாடல் மார்ச் 25 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. தற்போது இங்கு விற்பனையாகும் மாடல் 2017 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 

புதிய இ கிளாஸ் மாடலில் தடிமனான கிரில், புது ஹெட்லேம்ப்கள், ஸ்போர்ட் பம்ப்பர்கள், பின்புறம் எல்இடி டெயில் லைட்கள், மேம்பட்ட பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கேபின் பகுதியில் 10.25 இன்ச் அளவு கொண்ட இரு ஸ்கிரீன்கள் வழங்கப்படுகின்றன. 

என்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இ200 மாடலில் இந்த என்ஜின் 194 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறனும், டீசல் என்ஜின் 192 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இவற்றுடன் 9ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News