ஆட்டோமொபைல்
ஹூண்டாய் ஐயோனிக் 5

சர்வதேச சந்தையில் அறிமுகமான ஹூண்டாய் ஐயோனிக் 5

Published On 2021-02-24 10:26 GMT   |   Update On 2021-02-24 10:26 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


ஹூண்டாய் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. 2019 சர்வதேச மோட்டார் விழா ஒன்றில் ஹூண்டாய் அறிமுகம் செய்த கான்செப்ட் 45 மாடல் தற்சமயம் ஐயோனிக் 5 எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் குளோபல் மாட்யூலர் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. 

வடிவமைப்பை பொருத்தவரை புதிய ஐயோனிக் 5 மாடலில் பிக்சல் ரக ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் கிளாம்ஷெல் பொனெட் கான்செப்ட் மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 20 இன்ச் ஏரோடைனமிக் டிசைன் செய்யப்பட்ட டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பின்புறம் பிக்சலேட் செய்யப்பட்ட டெயில் லைட்கள், பிளாக் ஸ்டிரைப் உள்ளிட்டவை அசத்தல் தோற்றத்தை வழங்குகிறது. இதன் உள்புறம் அதிக சவுகரியத்தை வழங்கும் வகையில் அதிக இடவசதி கொண்டுள்ளது. காரின் இருக்கைகளை பயனர் வசதிக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐயோனிக் 5 மாடலை 58kWh மற்றும் 72.6 kWh என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் பெற முடியும்.



இவற்றுடன் ரியர் மோட்டார் அல்லது முன்புறம் மற்றும் பின்புறம் என இரு மோட்டார்களை பெறும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் 72.6 kWh பேட்டரி ஆல்-வீல் டிரைவ் வசதி கொண்டுள்ளது. இது 301 பிஹெச்பி பவர், 605 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டூ-வீல் டிரைவ் 214 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

சிறிய 58kWh பேட்டரி, AWD 232 பிஹெச்பி பவர் / 605 என்எம் டார்க் மற்றும் 2WD 168 பிஹெச்பி பவர் / 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் வழங்கப்படும் 350 kW அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் வசதி பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இது மற்ற அடாப்டர்களின் தேவையின்றி 400V அல்லது 800V சார்ஜிங் மையங்களில் சார்ஜ் செய்யும் வசதி கொண்டுள்ளது.
Tags:    

Similar News